Asianet News TamilAsianet News Tamil

மகாத்மா காந்தியின் பேரன் அருண்காந்தி உடல்நலக்குறைவால் காலமானார்..

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

Mahatma Gandhi's grandson Arun Gandhi passed away due to ill health.
Author
First Published May 2, 2023, 11:49 AM IST

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89. மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில்  உடல்நலக்குறைவால் காலமானார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 89 வயதான எழுத்தாளரும் சமூக-அரசியல் ஆர்வலருமான அருண் காந்தியின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகலில் கோலாப்பூரில் நடைபெறும் என்று அவரது மகன் துஷார் காந்தி தெரிவித்தார்.

ஏப்ரல் 14, 1934-ல் மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்குப் பிறந்த அருண் காந்தி, ஒரு ஆர்வலராக தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார். எனினும் `தனது தாத்தாவின் துறவு வாழ்க்கை முறையைத் தவிர்த்துவிட்டார். அவர் 2017 இல், அவர் The Gift of Anger: And Other Lessons From My Grandfather Mahatma Gandhi ஆகிய புத்தகங்களை வெளியிட்டார்.

இதையும் படிங்க : சாலை ஓரத்தில் தண்ணீர் குடிக்கும் புலி.. காத்திருந்து சென்ற வாகனங்கள்.. வைரல் வீடியோ..

மேலும் தான் எழுதிய கட்டுரையில் இந்திய அரசாங்கத்தை அருண்காந்தி விமர்சித்தார். அவர் 1987 இல் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் படித்த அவர், பின்னர் மெம்பிஸ், டென்னசிக்கு குடிபெயர்ந்தனர்.

அருண் காந்தி தன்னை ஒரு இந்துவாக கருதினார், ஆனால் உலகளாவிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். தனது தாத்தாவை போலவே அகிம்சை என்ற கருத்தை நம்பினார். காந்தி ஒரு மருத்துவமனையில் செவிலியர் சுர்நந்தாவை சந்தித்தார், அவர்கள் 1957 இல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியருக்கு 2 குழந்தைகள், துஷார், அர்ச்சனா என்ற பிள்ளைகள் உள்ளனர். 

2016 ஆம் ஆண்டு வரை, அருண் காந்தி நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டரில் வசித்து வந்தார். பின்னர் இந்தியாவுக்கு வந்தார். இந்த நிலையில் இன்று அவர் உடல்நலக்குறைவால் அருண் காந்தி காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க : பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக ரூ.830 கோடி செலவு.. ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

 

Follow Us:
Download App:
  • android
  • ios