மகாராஷ்ராவில் வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ராபூர் மாவட்டத்தில் சுமார் 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது கோர்பனா பகுதியில் நள்ளிரவில் வேன் வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி வேன் மீது மோதியது. இதில் பயணம் செய்த 7 பெண்கள், வேன் ஓட்டுநர், 3 வயது குழந்தை மற்றும் மற்றொரு நபர் என 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

படுகாயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.