மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில்  10 பச்சிளங்குழந்தைகள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் பண்டரா மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பச்சிளங் குழந்தைகள் துடிதுடித்து தீயில் கருகி உயிரிழந்தனர். தீ விபத்து தொடர்பாக உடனே தீயணைப்புத்தறைதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மொத்தம் 17 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 7 குழந்தைகள் பத்திரமாக மீட்டனர். பின்னர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.