ஷீரடி விமான நிலைய முணையம்: மகாராஷ்டிர அரசு ஒப்புதல் - சாய்பாபா பக்தர்கள் மகிழ்ச்சி!

ஷீரடி விமான நிலையத்தின் மற்றொரு முணையத்துக்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்துள்ளது

Maharashtra government approves another terminal at Shirdi airport smp

ஷீரடி விமான நிலையத்தின் மற்றொரு முணையத்தின் நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்து மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய பணிக்காக ரூ.364 கோடியும், மற்றொரு முனையத்தின் மேம்பாடு மற்றும் ஷீரடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.876 கோடியும் ஒதுக்க அரசு அணுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவை அம்மாநில தலைமைச் செயலாளர் தாக்கல் செய்ததையடுத்து, முதல்வர் மற்றும் மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஷீரடி விமான நிலையம் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் திருப்பதி போன்ற அனைத்து முக்கிய நகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 64,000 பயணிகளை ஷீரடி விமான நிலையம் கையாளுகிறது. இந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் சாய்பாபாவின் பக்தர்கள். பயணிகள் தவிர, விமான நிலையம் சரக்கு மற்றும் விவசாய பொருட்களையும் கையாளுகிறது.

விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளை அழகுபடுத்துதல், நுழைவு வாயில் அமைத்தல், ஓடுபாதை புனரமைப்பு, விமான நிலையத்தில் சாக்கடை கால்வாய், பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வீடுகள் கட்ட நிலம் கையகப்படுத்துதல் போன்ற மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகை முக்கியமாக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் போன் செய்தார்... திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேனா.? அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த திருமாவளவன்

ஷீரடி விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் திறனை அதிகரித்து அதன் முழுத் திறனையும் பயன்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. “தற்போது விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 300 பயணிகளை மட்டுமே கையாள முடியும். மற்றொரு பெரிய முனையத்தை உருவாக்கிய பிறகு, ஒரு மணி நேரத்திற்கு 1,200 பயணிகளைக் கையாள முடியும். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதல் பயணிகள் முனையம் அமைக்க வேண்டும். இதுதவிர, உணவுக் கடைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்,” என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஷீரடி விமான நிலையத்தில் அமையவுள்ள புதிய முனையம் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். இதில் அனைத்து நவீன வசதிகளும் இருக்கும். தரை மட்டத்தில் ஒரு செக்-இன் ஹால், பயணிகள் ஸ்கிரீனிங் மற்றும் ரிமோட் மூலம் பாதுகாக்கப்பட்ட ஹோல்ட் ஏரியா மற்றும் பேக்கேஜ் கையாளும் அமைப்புகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios