மௌனி அமாவாசையில் 8-10 கோடி பேர் பங்கேற்கலாம்! முதல்வர் யோகி அதிரடி உத்தரவு!
மௌனி அமாவாசையன்று 8-10 கோடி பக்தர்கள் மகா கும்பமேளா 2025-ல் சங்கமத்தில் நீராட எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்பாடுகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளார். ரயில்வே, போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
வரும் ஜனவரி 29ஆம் தேதி மௌனி அமாவாசை அன்று 8-10 கோடி பக்தர்கள் சங்கமத்தில் நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஏற்பாடுகளை மேம்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை, மூத்த அதிகாரிகளுடன் கடந்த 3 நாட்களின் நிலவரம் குறித்து ஆய்வு செய்த அவர், பௌஷ் பௌர்ணமி மற்றும் மகர சங்கராந்தி போன்ற இரண்டு முக்கிய ஸ்நானப் பர்வ நாட்களில் 6 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் செய்தனர் என்று தெரிவித்தார்.
மகா கும்பமேளா 2025: பிரமிக்க வைக்கும் டிரோன் காட்சிகள்
தொடர்ந்து பேசிய அவர் “ வரும் ஜனவரி 29ஆம் தேதி மௌனி அமாவாசை அன்று 8-10 கோடி மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏற்பாடுகளை மேலும் மேம்படுத்த வேண்டியது அவசியம். ரயில்வே துறையுடன் இணைந்து மகா கும்பமேளா சிறப்பு ரயில்களை சரியான நேரத்தில் இயக்க வேண்டும். வழக்கமான மற்றும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். பக்தர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும், முகாம் பகுதியில் செல்போன் நெட்வொர்க்கை மேம்படுத்த வேண்டும். பேருந்துகள், ஷட்டில் பேருந்துகள் மற்றும் மின்சார பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். கழிப்பறைகள் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட வேண்டும். நதிக்கரைகளில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் 24x7 மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.
மகா கும்பமேளா 2025: ஷங்கர் மகாதேவனின் கலை நிகழ்ச்சிகள்! எப்போது தெரியுமா?
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர், உள்துறை மற்றும் தகவல் துறை முதன்மைச் செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர், மின்சார வாரியத் தலைவர் மற்றும் தகவல் துறை இயக்குநர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.