மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நீக்கக்கோரி மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள, உத்தவ் தாக்கரே சிவசேனா,தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் மும்பையில் மிகப்பெரிய பேரணி இன்று நடந்தது.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நீக்கக்கோரி மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள, உத்தவ் தாக்கரே சிவசேனா,தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் மும்பையில் மிகப்பெரிய பேரணி இன்று நடந்தது.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சத்ரபதி சிவாஜி மகாராஜ், சமூகசீர்திருத்தவாதிகள் மகாத்மா புலே, சாவித்ரிபாய் புலே ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்திடமே நீதி இல்லையென்றால் மக்கள் எங்கு செல்வார்கள்?மகளிர் ஆணையத் தலைவர் வேதனை

இந்தக் கருத்துக்கு உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார்தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆளுநர் கோஷ்யாரியை நீக்கக் கோரி கடும் கோரிக்கைகள் எழுந்தன. 

ஆளும் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவில் இருக்கும் மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட ஆளுநர் கோஷ்யாரி பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

ராகுல் காந்தி தேசத்துக்கே அவமானம்!காங்கிரஸிலிருந்து நீக்குங்கள்: கார்கேவிடம் பாஜக காட்டம்

இதையடுத்து, ஆளுநர் கோஷ்யாரியை நீக்கக் கோரியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆளுநரை நீக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் எதிர்க்கட்சியான மகாவிகாஸ் அகாதி சார்பில் இன்று மிகப்பெரிய பேரணி மும்பையில் நடத்தப்பட்டது.

Scroll to load tweet…

உத்தவ் தாக்கரே பின்னணியில் இருக்கும் சிவசேனா தொண்டர்கள், தேசியவாத காங்கிரஸ்க ட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சியின் தொண்டர்கள் இணைந்து மும்பையை குலுங்கச்செய்யும் விதத்தில் பிரமாண்ட பேரணியை இன்று நடத்தினர்.

மும்பையில் உள்ள பைகுல்லா பகுதியில் உள்ள ரிச்சார்ட்ஸன் குருதாஸ் கம்பெனி பிரிவில் இருந்து பேரணி புறப்பட்டு, சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினலில் ஜேஜே மேம்பாலம் வழியாக முடிந்தது. 
ஏக்நாத் ஷிண்டேயுடன் பாஜக சேர்ந்து மகாவிகாஸ் அகாதி அரசை கவிழ்த்தபின், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து நடத்தும் முதல் பேரணி இதுவாகும்.

மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்:பூட்டோவுக்கு சூபி கவுன்சில் கண்டனம்

மகாவிகாஸ் அகாதி கூட்டணி கட்சிகளின் சார்பில்இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியில் பங்கேற்றனர். காங்கிரஸ் கொடி, என்சிபி கொடி, சிவசேனா அடையாளங்களுடன் இந்தபேரணியில் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க 2500 போலீஸார் குவிக்கப்பட்டனர். 317 காவல் அதிகாரிகள், 1870 கான்ஸ்டபிள்கள், 22 பட்டாலியன் காவல் படை, கலவரத்தைக் கட்டுப்படுத்தும் சிறப்பு அதிரடிப்படையில் 30 பட்டாளியன் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

Scroll to load tweet…

என்சிபி தலைவர் சரத்பவார், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அஜித் பவார், காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆகியோர் பேரணியில் பங்கேற்றனர். 

இந்தப் பேரணியில் அஜித் பவார் பேசுகையில் “ ஆளுநர் கோஷ்யாரி பேச்சால் மும்பை கொதித்துப் போயிருக்கிறது. மகாராஷ்டிராவைக் காக்க ஆளுநர் நீக்கப்பட வேண்டும” எனத் தெரிவித்தார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசுகையி்ல் “மகாராஷ்டிராவிற்கு துரோகம் இழைக்கும்போதும் மற்றும் மாநிலத்தை சிதைக்கும் நெருக்கடி வரும்போதும், மாநிலத்தின் சுயமரியாதை மற்றும் அடையாளத்தைக் காக்க, இலக்குகளை அடையும் வரை ஓயாது, முழு மகாராஷ்டிராவும் எரியும் என்பதற்கு அணிவகுப்பு ஒரு சாட்சி”எனத் தெரிவித்தார்