பொங்கல் பண்டிகை மகரசங்கராந்தி விழாவாக வடமாநிலங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆலயங்களில் நடைபெற்ற சிறப்புப் ​​பூஜைகளில் ஆயிரக்‍கணக்‍கானோர் கலந்து கொணடு வழிப்பட்டனர்,

பொங்கல் விழா இந்தியாவின்  பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் பொங்கல் விழா, மகரசங்கராந்தி விழாவாக  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இதனையொட்டி சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கங்கை நதிகரையில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் ஏராளமான  பெண்கள் கலந்து கொண்டனர்,

இதேபோல் உத்திரபிரேதசத்தில் மகரசங்கராந்தி வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.

வாரணாசியில் கங்கை நதியில் எராள​னோர் புனித ​நீராடி வ​ழிப்பட்டனர்.  

அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்று வரும் சிறப்புப்வழிபாடுகளில் ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர். 

ஹரிதுவாரில் மகரசங்கராந்தியை ஒட்டி  பூஜைகளுக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.