மத்தியபிரதேசத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டம், ராம்கார் கிராமத்தின் அருகே நேற்று நள்ளிரவு கார் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது, எதிர்திசையில் வந்த கார், எதிர்பாராத விதமாக மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 கார்களும் அப்பளம் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வந்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக மீட்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்த 12 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.