லாரியும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் இருந்து பஹ்ரியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் மைஹாரை நோக்கி சரக்கு வாகனத்தில் 20க்கும் மேற்பட்டோர் சென்றுக்கொண்டிருந்தனர். உபானி கிராமத்திற்கு அருகே சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதிகாலை 2.30 மணியளவில் லாரியும், சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் உயிரிாந்த 8 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
இன்று காலை ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. சித்தி மாவட்டத்தில் நடந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். அனைத்து ஓட்டுநர்களும் மிகவும் கவனமாக வாகனம் ஓட்டவும், சாலைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இரவில் ஓய்வெடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளேன் என்று முதல்வர் யாதவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
