அபுதாபியை தலைமையிடமாக கொண்டு, உலகம் முழுவதும் இயங்கி வரும் நிறுவனம் lulu(லுலு), கேரளா மாநிலத்திற்கு வெள்ள நிவாரண தொகையாக 50 மில்லியன் ரூபாய், இந்திய மதிப்பில் ரூ.26 கோடியை  நிவாரணமாக வழங்கி உள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து உள்ளது.

இந்த நிறுவனத்தின் அதிபர்யூசுப்அலி அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதால் ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டன. இதனால் பெரும் அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

மழை மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.இதுவரை 39 பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.    

இதனை தொடர்ந்து மழை, வெள்ளம், நிலச்சரிவால் ரூ.8,316 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து மத்திய அரசு ரூ.100 கோடி நிவாரண  நிதி வழங்குவதாக தெரிவித்தது. 

இந்நிலையில், பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்து வந்தனர்.
மேலும் தொழிலதிபர் லுலு நிறுவன தலைவர் யூசுப்அலி, ரூ.26 கோடி ரூபாயை நிவாரண தொகையாக  வழங்கி உள்ளது அனைவரின் பாராட்டை பெற்று உள்ளது.