Asianet News TamilAsianet News Tamil

சட்டப் பல்கலைக்கழக விடுதியில் ஐபிஎஸ் அதிகாரியின் 19 வயது மகள் மாரடைப்பால் மரணம்

லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா சட்டப் பல்கலைக்கழக விடுதியில் 19 வயதுடைய மாணவி அனிகா சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். தேசிய புலனாய்வு முகமையில் ஐஜி பதவியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் இவர். இவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Lucknow law university student Anika Rastogi dies in hostel father is an IPS officer vel
Author
First Published Sep 2, 2024, 11:19 PM IST | Last Updated Sep 2, 2024, 11:19 PM IST

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா சட்டப் பல்கலைக்கழகத்தில் திடீரென ஒரு மாணவி சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சனிக்கிழமை விடுதி அறையில் மாணவி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மை தெரியவரும்.

ஐபிஎஸ் அதிகாரியின் மகள் 19 வயதான அனிகா ரஸ்தோகி

இறந்த மாணவியின் பெயர் அனிகா ரஸ்தோகி, (வயது 19), ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் ஆவார். இவரது தந்தை தேசிய புலனாய்வு முகமையில் ஐஜி பதவியில் இருக்கிறார். அனிகா சட்டப் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.

மரணத்திற்கு முன்பு வழக்கு ஆலோசனையில் கலந்து கொண்டார் அனிகா

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சனிக்கிழமை அன்று மாணவர்களுடன் சேர்ந்து வழக்கு ஆலோசனையில் அனிகா கலந்து கொண்டதும், இரவு உணவு அருந்திய பின்னர் இரவு 9 மணியளவில் தனது அறைக்குத் தூங்கச் சென்றதும் தெரியவந்துள்ளது. ஒரு மணி நேரம் கழித்து இரவு 10 மணியளவில் அவரது தோழி அறைக்கு வந்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவர் கதவைத் தட்டிப் பார்த்தும், போன் செய்தும் எந்த பதிலும் இல்லை. பின்னர் விடுதியில் இருந்த மற்ற மாணவிகள் உதவியுடன் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அனிகா மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

லோகியா சட்டப் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கூறியது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக விடுதி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் சசாங்க் சேகர் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில், அனிகாவின் மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும்" என்றார். அனிகாவின் தந்தை சந்தோஷ் ரஸ்தோகி, தேசிய புலனாய்வு முகமையில் (என்ஐஏ) டெல்லியில் ஐஜி பதவியில் இருக்கிறார். தகவல் அறிந்ததும் அவர் உடனடியாக லக்னோ விரைந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios