Asianet News TamilAsianet News Tamil

மோசமான வானிலை.. டெல்லி ஏர்போர்ட்டில் தரையிறங்க முடியவில்லை.. திருப்பிவிடப்பட்ட 20 விமானங்கள் - என்ன நடந்தது?

20 Flights Diverted at Delhi : புது டெல்லியில் இன்று டிசம்பர் 2ம் தேதி சனிக்கிழமை, மோசமான வானிலை காரணமாக 18 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Low Visibility Procedure in Delhi Airport 20 flights diverted to nearby cities ans
Author
First Published Dec 2, 2023, 3:07 PM IST

டெல்லி விமான நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, சுமார் 18 முதல் 20 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானங்கள் ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோ, அகமதாபாத் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

இன்று காலை சுமார் 7.30 மணி முதல் காலை 10. 30 மணிநேரங்களுக்கு இடையில் இந்த திருப்பிவிடப்பட்ட நிகழ்வுகள் நடந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மொத்தம் 13 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், நான்கு விமானங்கள் அமிர்தசரஸுக்கும், தலா ஒரு விமானம் லக்னோ, அகமதாபாத் மற்றும் சண்டிகருக்கும் திருப்பி விடப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

பிரக்ஞானந்தா வீட்டில் மற்றொரு சாம்பியன் - இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகிறார் வைஷாலி ரமேஷ்பாபு!

இன்று காலை டெல்லி ஏர்போர்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு பெரிய அளவில் ஏற்பட்டு வருவது பல சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றது என்றே கூறலாம். ஆனால் இந்த விமானங்கள் திருப்பிவிடப்பட காற்று மாசு மட்டும் தான் காரணமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

சில தினங்களுக்கு முன்பு உலக அளவில் டெல்லி தான் அதிக மாசு அடைந்த நகரமாக மாறியது குறிப்பிடத்தக்கது. பொதுவாக AQI எனப்படும் Air Quality Index அளவை பொறுத்தவரை சில வாரங்களுக்கு டெல்லியில் பல இடங்களை AQI அளவு 600 என்ற அபாயகரமான அளவில் இருந்தது. AQI அளவு 200 என்ற அளவை தாண்டினாலே அது ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.   

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios