1950 ல் சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் எரிந்து போன சம்பவம் நாடறிந்த ஒன்றே. அது எப்படி நடந்தது என்று விசாரணை செய்ய DIG கேசவ மேனனை அரசு நியமித்தது. 

அந்த விசாரணை அறிக்கையின் இரண்டு பக்கங்கள் மட்டும் தற்போது வாட்ஸ் அப் மூலம் வைரலாக பரவி வருகிறது. அந்த அறிக்கையில், சன்னிதானத்தில் நிகழ்ந்தது தீ விபத்து அல்ல என்றும்  அது ஒரு தாக்குதல் என்றும் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நலையில், தற்போதைய சர்ச்சைகளுக்கும், இந்த பழைய அறிக்கைக்கும் எந்த விதமான நேரடித்தொடர்பும் இல்லை என்றாலும், சபரிமலையில் ஐயப்பன் ஆலயம் தொடர்பான அனைத்து விவகாரங்களும் தற்போது பெரும் வெடியாய் வெடிக்கிறது.

இப்படிப்பட்ட பதற்றமான நிலையில் தான் நேற்று ஐயப்பன் நடை திறக்கப்பட்டது. எப்படியாவது கோவிலுக்குள் செல்ல வேண்டும் என போராடி மலை ஏறிய பெண்கள் கூட பாதி வழியில் மனம் மாறி திரும்பி விட்டனர் 

இதற்கிடையில் சபரி மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஒரு பக்கம் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்றும், மற்றொரு பக்கம் கோவிலுக்குள் செல்ல கூடாது என்றும் கோஷங்கள் போரட்டங்கள் ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில் மத ரீதியான தூண்டுதல் உள்ளது என்றும், இதற்கு பின் சில சதி வேலைகள் இருக்கிறது என்றும் பெரும்பாலோனோர் விமர்சனம் செய்து வருகின்றனர்.