Lorry Strike the last 2 days has demanded the removal of customs booths across the country. 95 lakh trucks were participated.

நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற கோரி கடந்த 2 நாட்கள் நடைபெற்ற லாரிகள் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்துள்ளது. இதில் 95 லட்சம் லாரிகள் பங்கேற்றன. 

லாரிகள் வாங்கும்போது, விற்கும்போது இரு முறை ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் செலுத்த வேண்டியதை தவிர்க்க வேண்டும், டீசல் விலையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்ய வேண்டும், சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

2-வது நாளாக இன்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 95 லட்சம் லாரிகள் பங்கேற்றன. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்ததால் தமிழகம் முழுவதும் உள்ள 5 லட்சம் லாரிகள் 2 நாளாக ஓடவில்லை.

2 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கி உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி இழப்பீடு என சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.