Asianet News TamilAsianet News Tamil

1 இட்லி 1 லட்சத்துக்கு விற்றுமா ரூ. 3000 கோடி கடன்..? ஊரை அடித்து உலையில் போட்ட அப்பல்லோவுக்கு வந்த நிலைமை பாருங்க..!

ஒரு நாளைக்கு ஜெயலலிதா சாப்பிட்டதாக 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என வசூலித்த அந்த மருத்துவமனைக்கு ரூ.3,000 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

Look at the situation that came to Apollo
Author
Tamil Nadu, First Published Jul 18, 2019, 4:55 PM IST

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சாப்பாட்டு செலவு மட்டும் 75 நாட்களில் 1 கோடியே 17 லட்சம் ரூபாய். அதாவது ஒரு நாளைக்கு ஜெயலலிதா சாப்பிட்டதாக 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என வசூலித்த அந்த மருத்துவமனைக்கு ரூ.3,000 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 Look at the situation that came to Apollo

இதனால் மருத்துவமனைக்கு சொந்தமான சொத்துகளை விற்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடனை அடைக்க 13 செவிலியர் கல்லூரிகள், 2 மருத்துவக் கல்லூரிகளை விற்க அப்போலோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து அப்போலோவின் நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி கூறும்போது, ''எங்களுக்கு கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு எங்கள் நிறுவனத்தின் பங்குகளை அடமானமாக வைத்துள்ளோம். தற்போது 78 சதவீதமாக உள்ள அடமான பங்குகளை 20 சதவீதமாக குறைக்க முயற்சித்து வருகிறோம். பல முதலீட்டாளர்கள் எங்களது நிறுவனத்தை சந்தித்து பேசி வருகிறார்கள்'' எனத் தெரிவித்தார். தேவையான நிதியை திரட்ட இந்த மாத இறுதிக்குள் சில ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Look at the situation that came to Apollo

அப்பல்லோ மருத்துவமனைக்கு ரூ.3000 ஆயிரம் கோடிக்கு எந்த வகையில் கடன் ஏற்பட்டது எனத் தெரியவில்லை. பொதுவாக மருத்துவத்துறையில் செய்யும் முதலீடு பலமடங்கு லாபத்தை மட்டுமே கொடுக்கக்கூடியது. அதிலும் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏழை, எளிய மக்கள், ஏன் நடுத்தர வர்க்கத்தினர் கூட சென்று மருத்துவம் பார்க்க முடியாது. கட்டணத்தை கேட்டால் கண்ணைக் கட்டும். ‘’ அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்திருக்கீங்களா? அப்ப உங்க சொத்தை விற்க வேண்டியது தான் என பணக்காரர்களே அலுத்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு சிகிச்சை எடுக்க வருபவர்களிடம் கட்டணத்தை வசூலித்து விடும். Look at the situation that came to Apollo

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது 75 நாட்கள் ஜெயலலிதா சாப்பிட்டதாக ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு கொடுத்த அந்த ஒரு பில்லே அப்பல்லோவின் வசூலுக்கு சாட்சி. அப்படி இருக்கும் போது எப்படி வந்தது ரூ.3000 கோடி கடன்.    

சித்தூர் மாவட்டம், காளிப்பகம் சொந்த ஊராகக் கொண்ட பிரதாப் சி ரெட்டி சென்னை க்ரீம்ஸ் ரோட்டில் 1983ம் ஆண்டு சிறிய அளவிலான மருத்துவமனையைக் கட்டினார். ஏஜெண்டுகள் மூலம் கமிஷன் அடிப்படையில் நோயாளிகள் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது வரை நோயாளிகள் ஏஜெண்டுகள் மூலம் தான் அழைத்து வரப்படுவதாகக் கூறுகின்றனர். அப்பல்லோவின் வளர்ச்சி அபாரமானது. 

இப்போது இந்தியா மட்டுமின்றி தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் கிளைகளைக்ன் கொண்டுள்ளது அப்பல்லோ மருத்துவமனை மட்டுமின்றி மருத்துக்கடைகள், டையாக்னாஸ்டிஜ் உள்ளிட்ட மருத்துவ, மருந்து சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகிறது. Look at the situation that came to Apollo

அதில் நிகர லாபம் ஆண்டுக்கு 300 கோடி. கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஊழியர்கள் அப்பல்லோவில் பணியாற்றுகிறார்கள். அப்பல்லோ பொதுதுறை நிறுவனம். ஆகையால் தேசிய பங்குச் சந்தையில் அதன் ஒரு பங்கு 1390 ரூபாயாக இருக்கிறது. பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பீடு உயர்ந்து கொண்டுதான் செல்கிறது. அப்படி இருக்கும்போது அப்பல்லோவுக்கு எப்படி ரூ.3000 ஆயிரம் கோடி கடன் வந்தது என்கிற சந்தேகம் வலுவாக எழுகிறது.   

Follow Us:
Download App:
  • android
  • ios