Loksabha Election 2024 : திருவனந்தபுரத்தில் நிலவிய கடும் போட்டி - 4வது முறை வெற்றியை தக்கவைத்த சசி தரூர்!
Thiruvananthapuram : திருவனந்தபுரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், 4வது முறையாக சசி தரூர் வெற்றிபெற்றுள்ளார்.
லோக்சபா தேர்தலில் திருவனந்தபுரத்தை கடந்த 15 ஆண்டுகளாக பிரதிநிதித்துவப்படுத்தி வரும் நிலையில், சசி தரூர் தொடர்ந்து நான்காவது முறையாக, பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த ராஜீவ் சந்திரசேகரை 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இன்று காலை முதல் நிலவி வந்த கடும் போட்டியின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னியன் ரவீந்திரன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் பாதியில் தான் தரூரின் வெற்றி உறுதியானது என்று அது மிகையல்ல. பாரதிய ஜனதா கட்சியின்ராஜீவ் சந்திரசேகர் காலை முதல் முன்னிலை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தரூரை விட சுமார் 20,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்தார்,
ஆனால் கடைசி சில சுற்றுகளின் எண்ணெய்களில் தான் தரூர் 358155 வாக்குகளும், சந்திரசேகர் 342078 வாக்குகளும் பெற்ற நிலையில் பன்னியன் 247648 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த கடுமையான போட்டி கடந்த 2014 தேர்தலை நினைவூட்டியது என்றே கூறலாம். தரூர் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தனது போட்டியாளரான பாஜகவின் கும்மனம் ராஜசேகரனை விட ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி திவாகரன் 2.58 லட்சம் வாக்குகள் பெற்றார். நரேந்திர மோடியை ஆட்சிக்குக் கொண்டுவந்த 2014 தேர்தலில், திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளர் ஓ ராஜகோபால் சசி தரூருக்கு கடுமையான போட்டியை அளித்தார். அதே போல இந்த தேர்தலிலும் பன்னியன் ரவீந்திரன் தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் தனது பிரச்சார வாகனத்தில், தனது அனல் பறக்கும் பேச்சுக்களால். திருவனந்தபுரத்தில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் தொடர்ந்து கலந்துகொள்பவராக அறியப்பட்டார்.
2019 தேர்தலை விட குறைவான வாக்குகள் பெற்று பிரதமர் மோடி வெற்றி!