Election 2024 : மீண்டும் ஆட்சி அமைக்கிறார் மோடி.. எதிர்க்கட்சிகளின் நிலை என்ன? கருத்துக்கணிப்பு சொல்வதென்ன?
Loksabha Election 2024 : இந்த 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று ஜூன் 1ம் தேதி நிறைவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவுடன், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பும் வெளியாகியுள்ளது.
2024 லோக்சபா தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று ஜூன் 1ம் தேதி நிறைவடைந்தது. ஏழு கட்ட வாக்குப்பதிவுடன், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் வெளியாகியுள்ளது. பல்வேறு அமைப்புகள் நடத்திய கருத்துக்கணிப்புகளை வைத்து பார்க்கும்போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்றும், அதேசமயம் இந்திய கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்டங்களிலும் வாக்குப்பதிவு முடிந்து, கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் எக்ஸிட் போல்களை வெளியிட்டுள்ளன. கடைசி கட்டமாக 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி வரை 58.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வெளியான தகவலின்படி
ரிபப்ளிக் பிமார்க் - பாஜக - 359, காங்கிரஸ் - 154, பிற கட்சிகள் 30 இடங்கள்.
ரிபப்ளிக் மேட்ரிஸ் - பாஜக - 353 முதல் 368 இடங்கள், காங்கிரஸ் 118 முதல் 133 இடங்கள், பிற கட்சிகள் 43 முதல் 48இடங்கள்.
இந்தியா நியூஸ் - டைனமிக்ஸ் : பாஜக - 371, காங்கிரஸ் - 125, பிற காட்சிகள் - 47 இடங்கள்.
டிவி தெலுங்கு - பாஜக - 359, காங்கிரஸ் - 154, பிற கட்சிகள் - 30,
ஜன்கி பாத் - பாஜக - 362 முதல் 392 இடங்கள், காங்கிரஸ் - 141 முதல் 161 இடங்கள், பிற கட்சிகள் - 10 முதல் 20 இடங்கள்.
தமிழ்நாட்டை மீண்டும் கைப்பற்றுகிறதா திமுக? இலை, தாமரை மலருமா? கருத்துக்கணிப்பு முடிவு சொல்வது என்ன?