மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறக்கூடும் எனவும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மக்களவையில் நடைபெறும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10 ஆம் தேதி பதில் அளிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா கட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த வாரம் ஏற்றுக்கொண்டார்.
மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தவும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசவும் கோரி, எதிர்க்கட்சிகள் பல நாட்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்தன.

காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சிகள் சார்பில் ஜூலை 26 அன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்திருந்தார். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, விவாதம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
சபாநாயகர் முடிவெடுத்தபோது நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறை பற்றி ஒருமுறைகூட வாய் திறக்கமால் இருந்த பிரதமர் மோடி, இரண்ணு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொல்லபட்ட வீடியோ வெளியான பின்பு 36 வினாடிகள் மட்டும் அதைப்பற்றிப் பேசினார்.
10வது மாடியில் திடீரென பழுதாகி விழுந்த லிஃப்ட்... நூலிழையில் ஆபத்தில் இருந்து தப்பிய தாய், மகன்!
