Asianet News TamilAsianet News Tamil

Lok Sabha Elections 2024: மாநிலம், தொகுதி வாரியாக மக்களவைத் தேர்தல் தேதிகள்... முழு விவரம் இதோ...

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Lok Sabha Elections 2024 schedule announced: Key dates, phase, state and constituency-wise details here sgb
Author
First Published Mar 16, 2024, 8:16 PM IST

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது. இந்த ஏழு கட்டங்களில் 543 தொகுதிககளிலும் வாக்குப்பதிவு நடக்கும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்.

மேலும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும். அதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி தெரியவரும். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, மாதிரி நடத்தை விதிகள் இப்போது அமலில் உள்ளன.

 

தேர்தலில் வங்கிகளுக்கு முக்கியமான ரோல்! தினமும் தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட்!

பின்வரும் அட்டவணையில் கட்டம் வாரியாக தேர்தல் தேதிகளைப் பார்க்கலாம்:

கட்டங்கள்

வாக்களிக்கும் தேதி

மாநிலங்களில்

கட்டம் 1

ஏப்ரல் 19

21

கட்டம் 2

ஏப்ரல் 26

13

கட்டம் 3

மே 7

12

கட்டம் 4

மே 13

10

கட்டம் 5

மே 20

8

கட்டம் 6

மே 25

7

கட்டம் 7

ஜூன் 1

8

கட்டம் 1

21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 1 ஆம் கட்டத்திற்கான முக்கிய தேதிகள்:

அறிவிப்பின் தேதி

மார்ச் 20

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

மார்ச் 27

வேட்புமனுக்கள் பரிசீலனை

மார்ச் 28

வாக்குப்பதிவு தேதி

ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை

ஜூன் 4

கட்டம் 2

13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 2 ஆம் கட்டத்திற்கான முக்கிய தேதிகள்:

அறிவிப்பின் தேதி

மார்ச் 28

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

ஏப்ரல் 4

வேட்புமனுக்கள் பரிசீலனை

ஏப்ரல் 5

வாக்குப்பதிவு தேதி

ஏப்ரல் 26

வாக்கு எண்ணிக்கை

ஜூன் 4

10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்... என்னென்ன அடிப்படை வசதிகள் இருக்கும்? தேர்தல் ஆணையம் விளக்கம்

கட்டம் 3

12 மாநிலங்களில் உள்ள 94 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 3 ஆம் கட்டத்திற்கான முக்கிய தேதிகள்:

அறிவிப்பின் தேதி

ஏப்ரல் 12

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

ஏப்ரல் 19

வேட்புமனுக்கள் பரிசீலனை

ஏப்ரல் 20

வாக்குப்பதிவு தேதி

மே 7

வாக்கு எண்ணிக்கை

ஜூன் 4

கட்டம் 4

நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13-ம் தேதி 10 மாநிலங்களில் உள்ள 96 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 4 ஆம் கட்டத்திற்கான முக்கிய தேதிகள்:

அறிவிப்பின் தேதி

ஏப்ரல் 18

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

ஏப்ரல் 25

வேட்புமனுக்கள் பரிசீலனை

ஏப்ரல் 26

வாக்குப்பதிவு தேதி

மே 13

வாக்கு எண்ணிக்கை

ஜூன் 4

கட்டம் 5

8 மாநிலங்களில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மே 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்டத்திற்கான முக்கிய தேதிகள்:

அறிவிப்பின் தேதி

ஏப்ரல் 26

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

மே 3

வேட்புமனுக்கள் பரிசீலனை

மே 4

வாக்குப்பதிவு தேதி

மே 20

வாக்கு எண்ணிக்கை

ஜூன் 4

மக்களவை தேர்தல் 2024.. ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரம்!

கட்டம் 6

7 மாநிலங்களில் உள்ள 57 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மே 25ஆம் தேதி ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 6 ஆம் கட்டத்திற்கான முக்கிய தேதிகள்:

அறிவிப்பின் தேதி

ஏப்ரல் 29

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

மே 6

வேட்புமனுக்கள் பரிசீலனை

மே 7

வாக்குப்பதிவு தேதி

மே 25

வாக்கு எண்ணிக்கை

ஜூன் 4

கட்டம் 7

8 மாநிலங்களில் உள்ள 57 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 7 ஆம் கட்டத்திற்கான முக்கிய தேதிகள்:

அறிவிப்பின் தேதி

மே 7

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

மே 14

வேட்புமனுக்கள் பரிசீலனை

மே 15

வாக்குப்பதிவு தேதி

ஜூன் 1

வாக்கு எண்ணிக்கை

ஜூன் 4

வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் 2024க்கான மாநில வாரியான அட்டவணையைப் பாருங்கள்:

கட்டம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

தொகுதிகள்

ஏப்ரல் 19

அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள் புதுச்சேரி

102

ஏப்ரல் 26

அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர்

89

மே 7

அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தாமன் மற்றும் டையூ, ஜம்மு மற்றும் காஷ்மீர்

94

மே 13

ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர்

96

மே 20

பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், லடாக்

49

மே 25

பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி

57

ஜூன் 1

பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், சண்டிகர்

57

ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் கால அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும், பீகார், குஜராத், ஹரியானா, திரிபுரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள 26 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்குமா என்ற யூகங்கள் நிலவி வந்த நிலையில், அவை நிறைவேறவில்லை.

பொன்முடி அமைச்சராவது பற்றி தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்: சத்யபிரதா சாஹூ

Follow Us:
Download App:
  • android
  • ios