மக்களவை தேர்தல் 2024.. பாஜக சார்பாக கேரளாவில் களமிறங்கும் பிரபல நடிகர் - இந்த புதிய யுக்தி வெற்றி பெறுமா?
Kerala Lok Sabha Election : எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பதியலை இப்பொது பாஜக வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடவுள்ளார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான 195 தொகுதிகளுடைய வேட்பாளர் பட்டியலை தற்பொழுது பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் கூட்டணி கட்சிகள் உடனான உடன்பாடு எட்டப்படாத நிலையில், தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் பாஜக சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்த பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
குறிப்பாக கேரளாவில் 12 இடங்களில் பாஜகவின் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். கேரளாவில் ஸ்டார் வேட்பாளரான மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் திருவனந்தபுரம் பகுதியில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க முதல் முறையாக பிரபல நடிகர் சுரேஷ் கோபி அவர்களை திருச்சூரில் களமிறக்கிறது பாஜக.
இந்தியா முழுவதும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் பாஜகவால் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரிய அளவில் வெற்றிகளை காண முடியாமல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பிரபல நடிகர் ஒருவரை களம் இறக்குவதன் மூலம் தங்களுக்கான வாக்கு வங்கியை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்ற எண்ணத்தில் திருச்சூரில் சுரேஷ் கோபியை பாஜக களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கேரளாவில் உச்ச நடிகர் ஒருவர் களமிறக்குவதன் மூலம் ஒரு நல்ல வாக்கு வங்கியை பெறமுடியும் என்ற பாஜக திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. தமிழகத்திலும் நடிகர் ஒருவர் பாஜக சார்பில் களமிறக்கப்படுவார் என்று அண்மையில் செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே பாஜகவின் இந்த புதிய யுக்தி பலன் தருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
75 ஆண்டுகால வரலாற்றில் திமுக அழிந்துவிடும் என்று சொன்ன அனைவரும் காணாமல் போய்விட்டனர் - இளங்கோவன்
- Amit Shah
- BJP
- BJP Candidate First list
- BJP candidates in Kerala
- BJP candidates selection
- Bharatiya Janata Party
- Kerala
- Lok Sabha Elections 2024 Suresh Gopi
- Lok Sabha election news
- Lok Sabha elections 2024
- Lok Sabha elections live updates
- Lok Sabha polls 2024
- Modi Amit Shah election strategy
- PM Narendra Modi
- Rajeev Chandrasekhar
- Suresh Gopi
- bjp candidate list
- loksabha election
- loksabha election 2024