கேரளாவில் 12 மக்களவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி, திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட உள்ளனர்.

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. 34 மத்திய அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியிலும், மத்திய அமைச்சர் அமித்ஷா காந்திநகரிலும் போட்டியிடுகின்றனர். மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. 16 மாநிலங்களில் உள்ள 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியிலும், மத்திய அமைச்சர் அமித்ஷா காந்திநகரிலும் போட்டியிடுகின்றனர். கேரளாவில் 12 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பாஜக வேட்பாளராக இருப்பார். காசர்கோடு - எம்.எல்.அஷ்வனி, திருச்சூர் - சுரேஷ் கோபி, ஆலப்புழா - ஷோபா சுரேந்திரன் ஆகியோர் அடங்குவர்.

பத்தனம்திட்டா - அனில் ஆண்டனி, கண்ணூர் - சி.ரகுநாத், மலப்புரம் - டாக்டர் அப்துல் சலாம், வடகரை - பிரபுல் கிருஷ்ணா, பொன்னானி - நிவேதிதா சுப்ரமணியம், அட்டிங்கல் - வி.முரளிதரன், கோழிக்கோடு - எம்.டி.ரமேஷ், பாலக்காடு - சி.கிருஷ்ணகுமார் ஆகியோர் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

BJP candidate list 2024: பாஜக வேட்பாளர்கள் பட்டியல்; 195 பேர் பட்டியலில் தமிழக வேட்பாளர்கள் இடம்பெறவில்லை!!