Lok Sabha Election Phase 6: தொடங்கியது 6ம் கட்ட வாக்குப்பதிவு.. எந்தெந்த தொகுதிகள்? யாரெல்லாம் போட்டி!

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில்  7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

Lok Sabha Election Phase 6 polling has started in 58 constituencies tvk

மக்களவைத் தேர்தல் 6ம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில்  7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும்,  2ம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி 88 தொகுதிகளுக்கும், 3ம் கட்டமாக மே 7ம் தேதி 93 தொகுதிகளுக்கும், 4ம் கட்டமாக மே 13ம் 96 தொகுதிகளுக்கும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்றும் , 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இதையும் படிங்க: நவீன் பட்நாயக்கை பிணைக் கைதியாக வைத்திருக்கும் வி.கே பாண்டியன்.. ஒடிசா அரசியலில் சர்ச்சையை கிளப்பிய பாஜக..

அதன்படி இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு உத்தரபிரதேசத்தில் 14, ஹரியானா 10, பீகார் , மேற்கு வங்கத்தில் 8, டெல்லி 7, ஒடிசா 6, ஜார்க்கண்ட் 4, ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் மொத்தம் இன்று  8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

6ம் கட்ட வாக்குப்பதிவு உள்ள 58 தொகுதிகளில், 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் கன்னையா குமார், அவரை எதிர்த்து பாஜக சார்பில் மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். மேலும் மறைந்த பாஜக மூத்த தலிவர் சுஸ்மா சுவாராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.  சுல்தான்பூரில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள மேனகா காந்தி மக்களவையில் 9வது முறையாக போட்டியிடுகிறார்.  இவர்களைத் தேர்ந்தெடுக்க 5.48 கோடி ஆண் வாக்காளர்கள், 5.29 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 5,120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11.13 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: Tirumala Tirupati Devasthanam: திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios