Asianet News TamilAsianet News Tamil

உனக்கெல்லாம் முதுகெலும்பில்லை உட்கார்... மக்களவையில் ரவீந்திரநாத்தை பங்கம் செய்த டி.ஆர்.பாலு..!

டி.ஆர்.பாலு,  நான் யாரையும் மிரட்டவில்லை. எனக்கு முதுகெலும்பு இருப்பதால் என்னை பேச அனுமதித்தீர்கள். சிலருக்கு முதுகெலும்பு இல்லை. அதனால் நான் அவர்களைப் பேசக் கூடாது என்றேன். அப்போது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சிரிப்பொலியை எழுப்பினர். 

lok sabha dmk mp tr baalu speech
Author
Delhi, First Published Aug 6, 2019, 6:31 PM IST

மக்களவையில் பேச்சுக்கு இடையே குறுக்கிட்ட அதிமுக எம்.பி.ரவீந்திரநாத்தை விமர்சித்து திமுக எம்.பி டி.ஆர்.பாலு கிண்டலடித்து பேசியுள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஜம்மு- காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். lok sabha dmk mp tr baalu speech

அப்போது அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குறுக்கிட்டு பேச முயன்றார். அப்போது அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குறுக்கிட்டு பேச முயன்றார். சற்று ஆவேசமாக கையை நீட்டி ரவீந்திரநாத்தை அமரும்படி கையை காட்டியதோடு  உங்களுக்கு முதுகெலும்பு இல்லை. அமருங்கள். இங்கே முதுகெலும்பு உள்ள நபர்களைத்தான் சபாநாயகர் பேச அனுமதித்தார் என்று கூறினார். lok sabha dmk mp tr baalu speech

கனிமொழி எம்.பி.யும் எழுந்து ரவீந்திரன் ஏன் குறுக்கிடுகிறார்? என்று கேள்வி எழுப்பினார். அப்போது சபாநாயகர், உறுப்பினரை மிரட்டும் வகையில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு,  நான் யாரையும் மிரட்டவில்லை. எனக்கு முதுகெலும்பு இருப்பதால் என்னை பேச அனுமதித்தீர்கள். சிலருக்கு முதுகெலும்பு இல்லை. அதனால் நான் அவர்களைப் பேசக் கூடாது என்றேன். அப்போது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சிரிப்பொலியை எழுப்பினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios