Asianet News TamilAsianet News Tamil

lok sabha: மக்களவை, மாநிலங்களவை பிற்பகல்வரை ஒத்திவைப்பு: விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளி

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

Lok Sabha adjourned till 2 pm
Author
New Delhi, First Published Jul 19, 2022, 12:25 PM IST

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது, மேலும், மறைந்த எம்.பி.க்கள் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை பாஜக அழிக்கிறது: ராகுல் காந்தி விளாசல்

Lok Sabha adjourned till 2 pm

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது என கண்டீஷன் போட்ட கணவன் கொலை... கல்யாணம் ஆன 4 மாதத்தில் புது பெண் வெறிச்செயல்.

இந்நிலையில் 2வது நாளான இன்று நாடாளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை அதிகரிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்

அதன்பின் காங்கிரஸ் உள்ளிட்ட எம்.பி.க்கள் அவைக்குத் திரும்பினர். அப்போது, மக்களவையில் திமுக, திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் எம்.பி.க்கள் தாங்கள் கையில் வைத்திருந்த பதாகைகளை உயர்த்தி, ஜிஎஸ்டிவரி உயர்வுக்கு எதிராக கோஷமிட்டனர். விலைவாசி உயர்ந்துவருவதையடுத்து, மோடி அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எம்.பி.க்கள் எழுப்பினர்.

இதைப் பார்த்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, உறுப்பினர்களை தங்கள் இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டார். பதாகைகள் எடுத்துவருவது நாடாளுமன்ற விதிக்கு முரணானது என்று ஓம் பிர்லா தெரிவித்தார்.

Lok Sabha adjourned till 2 pm

ஓம் பிர்லா பேசுகையில் “ விவசாயிகள் பிரச்சினையிலிருந்து இந்த அவை விவாதித்து வருகிறது, உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்க வேண்டும். விதிகளை நீங்கள்தான் கொண்டு வருகிறீர்கள், நீங்களே கடைபிடிக்க மறுக்கிறீர்கள். விவசாயிகள் பிரச்சினையை நீங்கள் அவைக்கு வெளியே பேசினீர்கள், உள்ளே பேசவில்லை. 

பணவீக்கம், சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை பற்றி அவைக்கு வெளியே விவாதிக்கிறீர்கள், அவைக்கு உள்ளே பேசுவதில்லை. கடந்த செசனில்கூட நீங்கள் விலைவாசி உயர்வுகுறித்த விவாதத்தில் பங்கேற்கவில்லை. இது சரியல்ல” எனத் தெரிவித்தார்.

Lok Sabha adjourned till 2 pm

ஆனால், அவைத்தலைவர் ஓம் பிர்லா கூறியதை காதில் வாங்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். அவர்களை அமைதியாகஅமருமாறு அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடவை அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

இதேபோல, மாநிலங்களவையிலும் விலைவாசி உயர்வு குறித்து காங்கிரஸ் உள்ளி்ட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை பிற்பகல் வரை ஒத்திவைத்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios