ஹவுரா - டெல்லி இடையேயான பூர்வா விரைவு ரயிலில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாகவும் பல்வேறு குறைபாடுகளுடனும் இருப்பதாக ரயில் பயணிகள் புகார்கள் கூறி வருகின்றனர்.

ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாக இருப்பதாக கணக்குத் தணிக்கைக் துறை, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும் உள்ளன.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம், சந்தவ்லியில் பூர்வா விரைவு ரயிலில பயணம் செய்த பெண் ஒருவருக்கு ரயிலில் வெஜிடபுள் பிரியாணியை வாங்கியுள்ளார்.

அதனை திறந்து பார்த்த அந்த பெண் பயணி, கடும் அதிர்ச்சி அடைந்தார். அதில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது.

இதையடுத்து, அந்த பெண் பயணி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு டுவிட்டர் மூலம் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டார்.

மேலும், வெஜிடபுள் பிரியாணியில் பல்லி இருந்தது தொடர்பான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்டும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி அளித்துள்ளார்.