little girl murder in delhi
டெல்லியில் வீட்டு வேலை செய்து வந்த 16 வயது சிறுமி ஒருவர், தனது சம்பள பாக்கியைக் கேட்டதற்காக 12 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பெண் சோனியை, கர்கெட்டாவை சேர்ந்த மன்ஜித் என்ற ஏஜெண்ட், நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி டெல்லிக்கு அழைத்து சென்றார். அங்குள்ள தொழிலதிபர் வீட்டில் அந்த சிறுமிக்கு வீட்டு வேலை செய்யும் வேலை வாங்கிக் கொடுத்தார்.
அந்த சிறுமி சோனிக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தில் ஒரு பகுதியை மன்ஜித் பறித்து வைத்துக் கொள்வார் என கூறப்படுகிறது. பின்னர் அந்த வீட்டில் வேலை செய்யப் பிடிக்காமல் அந்த சிறுமி வேலையை விட்டுவிட்டார்.
இதையடுத்து கர்கெட்டா சென்று மன்ஜித்திடம் தனது சம்பள பணத்தை சோனி கேட்டுள்ளார். பணம் கொடுக்க முடியாது எனக் கூறிய மன்ஜித், அந்த சிறுமியை அடித்துவிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் டெல்லி மியான் வாலி நகரில் உள்ள ஒரு வாய்க்காலில் சோனி பிணமாக கிடந்தார். அவரது உடல் அந்த வாய்க்காலுக்குள் 12 துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடி கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் மன்ஜித் கொலை செய்தது உறுதிபடுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதற்கு 2 பேர் உதவி செய்ததாக கூறி உள்ளார். அவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
