Asianet News TamilAsianet News Tamil

உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் மத்திய அமைச்சர்கள்... வெளியானது பட்டியல்!!

உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

list of central ministers released those who rush to Ukraines neighbors
Author
India, First Published Feb 28, 2022, 5:50 PM IST

உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகள் வழியாக வெளியேற்றும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வர ஹங்கேரி மற்றும் ருமேனியாவுக்கு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆபரேசன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5வது சிறப்பு விமானம் இன்று டெல்லி வந்தடைந்தது. இதன்படி உக்ரைனில் இருந்து இதுவரை 4,000 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 4 ஒன்றிய அமைச்சசர்களை அனுப்பி இந்தியர்களை மீட்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

list of central ministers released those who rush to Ukraines neighbors

மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ ஆகியோரை உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உட்பட அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட அந்நாட்டின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் காரணமாக,அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க வேண்டும் என டெல்லியில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில்,மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, உக்ரைனில் அண்டை நாடுகளுக்கு அமைச்சர்களை அனுப்பி வைப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

list of central ministers released those who rush to Ukraines neighbors

அந்த வகையில்,மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ,ஜோதிராத்திய சிந்தியா, ஹர்தீப் சிங், விகே சிங் உள்ளிட்டோர் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்ள ஆபரேசன் கங்கா திட்டத்தின்படி 4 மத்திய அமைச்சர்கள் செல்லும் நாடுகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவுக்கு செல்கிறார். மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஸ்லோவாகியா செல்கிறார். மத்திய நகர்ப்புறத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரி செல்கிறார். மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் போலாந்து நாட்டிற்கு செல்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios