Asianet News TamilAsianet News Tamil

தோனிக்கு கிடைக்கப்போகும் கவுரவம்... வியாழக்கிழமை காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அது போல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் அது மாநில அந்தஸ்தையும் இழந்தது.  மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில் இந்திய அரசுக்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. 

Lieutenant Colonel MS Dhoni Might Hoist the Indian Flag In Ladakh This Independence Day
Author
Ladakh, First Published Aug 10, 2019, 5:42 PM IST

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அது போல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் அது மாநில அந்தஸ்தையும் இழந்தது.  மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில் இந்திய அரசுக்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. 

இந்நிலையில் லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின் வரும் முதல் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் வியாழன் அன்று அங்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தேசியக் கொடி ஏற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எந்த இடத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

தோனி லடாக்கில் தேசியக் கொடி ஏற்றவுள்ள நிகழ்ச்சியில் லடாக் தொகுதியின் எம்.பி. ஜம்யங் செரிங் கலந்து கொள்ள உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே தேசியக் கொடி ஏற்றும் இடம் குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியக் கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கிறது. இந்த தொடரில் பங்கேற்காமல் இரு மாதங்கள் தோனி ஓய்வில் இருப்பதாக அறிவித்தார். அதுமட்டுமல்ல இந்த இரு மாதமும் அவர் இந்திய ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

தோனி இந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கலோனல் பதவியில் உள்ளார். பாராஷுட் ரெஜிமென்ட் பிரிவில் அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. கௌரவ பதவி தான் என்றாலும், தோனி இராணுவம் மீது கொண்ட ஆர்வத்தால்  இராணுவ பயிற்சி மற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஜூலை 31 முதல் 106 டிஏ பட்டாலியனில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios