கர்நாடக முன்னாள் அமைச்சரின் மகள், திருமணத்துக்கு எல்சிடி திரையுடன் கூடிய அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் அனைவரையும் கவரும் விதமாக அமைந்துள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழில் அதிபருமான ஜனார்தனன் ரெட்டிதனது மகள் திருமணத்துக்காக எல்இடி திரையுடன் கூடிய அழைப்பிதழை தயாரித்துள்ளார். 

இவரை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணவேண்டும் என்றால், கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்களில் ஒருவர் தான் இந்த ஜனார்தன் ரெட்டி.

ஜனார்தன் ரெட்டியின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைக்க ஒரு அழைப்பிதழ் பெட்டியையே கொடுத்து வருகிறார். அப்பெட்டியை திறந்தவுடன் அதில் ஒரு எல்சிடி திரையில் ஒரு நிமிடத்துக்கு மேலாக ஒரு வீடியோ தோன்றுகிறது. அதில் ஒரு பிரத்யேக பாட்டு ஒளிபரப்பாகிறது.

அந்த வீடியோ காட்சியில் ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவி, மகன், மற்றும் மணப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்துக்கு அழைப்பதுபோன்ற காட்சி ஒளிபரப்பாகிறது.

எல்.சி.டி திரையில் வீடியோ மூலம் திருமணத்திற்கு அழைப்பு விடுப்பது தொழில்நுட்பம் மற்றும் ஆடம்பரத்தின் வெளிப்பாடாகவே கருதப்பட்டாலும், அழைப்பிதழிலேயே இப்படியென்றால் திருமணத்தில் என்னென்ன பிரமாண்டங்கள் இருக்கின்றனவோ எனபார்ப்பவர்களை வியக்க செய்கிறது.

மேலும், நடிகர்கள் ஷாரூக் கான், பிரபுதேவா, தமன்னா, கத்திரினா கைப் உள்பட ஏரளாமான நட்சத்திரப் பட்டாளமே ரெட்டி வீட்டு திருமணத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.