மனைவியின் உடல் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரனை கொலை செய்து செல்பி எடுத்து மனைவிக்கு அனுப்பி வைத்த சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் சில்லோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகித். இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளது. மோகித்தும், அவரது மனைவியும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். மோகித் சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

மோகித்தின் சகோதரி வீட்டில் பிரபாகர் என்ற வாலிபர் வேலை பார்த்து வருகிறார். அவருடன் மோகித்துக்கு பழக்கம் ஏற்பட்டதில், இருவரும் சேர்ந்து அவ்வப்போது மது அருந்துவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மோகித் பிரபாகருடன் சேர்ந்து மது குடித்து உள்ளார். அப்போது, அவரது மனைவியை பிரபாகர் அழகை அணுஅணுவாக  ஆபாசமாக வர்ணித்து உள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மோகித் அங்கு கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி பிரபாகரை கொலை செய்தார்.

பின்னர் அவரது உடலுடன் "செல்பி" புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து, அதை தனது மனைவிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

பின்னர் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். 

போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மோகித்தை கைது செய்து விசாரித்தபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து மோகித் மீது வழக்குப்பதிவிட்டு, காது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.