Latvian woman Liga Skromane murder Kerala police probe drug mafia angle
போதை மருந்து கும்பலின் கற்பழிப்பு முயற்சியில் வெளிநாட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோட்டில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்த லாத்வியா நாட்டைச் சேர்ந்த லிகா என்ற இளம்பெண் திடீரென்று காணவில்லை.
இந்நிலையில் அவருடன் வந்த அவரது தங்கை இலீஸ் அக்கா காணமல் போனதால் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லிகாவை தேடி வந்த நிலையில் திருவனந்தபுரம் வாழமுக்கிதோப்பு என்ற இடத்தில் அவர் பிணமாக கண்டு பிடிக்கப்பட்டார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து லிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கை, கழுத்து என்று உடலின் பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர் மூச்சு திணறி இறந்து இருப்பதும் தெரிய வந்தது. இதனால் லிகா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். லிகா பிணமாக கிடந்த காட்டு பகுதிக்கு போலீஸ் உயர் அதிகாரி தலைமையிலான குழுவினர் சென்று விசாரணை நடத்தியதில், அவர்களுக்கு முக்கிய ஆதாரங்கள் சிக்கியது. அது என்னவென்றால், பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்திய போது போதை மருந்து விற்பனை செய்யும் கும்பலுடன் லிகா சென்றதை பார்த்ததாக சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போதை மருந்து விற்பனை செய்யும் 5 பேர் கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். முதலில் அவர்கள் லிகா பற்றி எதுவும் தெரியாது என்று கூறி உள்ளனர்.

பிறகு போலீசார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது லிகாவை ஒரு படகில் ஏற்றிக்கொண்டு கடற்கரையில் உள்ள தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர். அந்த கும்பல் தோப்புக்கு சென்றதும் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர். அதன் பிறகு லிகாவை கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த கும்பல் அவரை தாக்கியதில் லிகா அதே இடத்தில உயிரிழந்து விட்டார். இதனையடுத்து லீகா உடலை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.தற்போது இந்த தகவல்கள் மட்டுமே போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
