Asianet News TamilAsianet News Tamil

மாலத்தீவு பயணத்தை ரத்து செய்யும் இந்தியர்கள்: இதுதான் காரணம்!

இந்தியா மற்றும் இந்தியர்கள் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் இழிவான கருத்துக்களை தெரிவித்து வருவதால் அந்நாட்டு பயணத்தை ஏராளமான இந்தியர்கள் ரத்து செய்து வருகின்றனர்

Large number of Indians cancel their Maldives holiday plan after their ministers disparaging comments smp
Author
First Published Jan 7, 2024, 11:43 AM IST

பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்னர் லட்சத்தீவுக்கு பயணமானார். அந்த பயணத்தின் போது லட்சத்தீவின் அழகிய கடற்கரை, தெளிவான கடல் நீர் ஆகியவற்றின் அழகை கண்டு ரசித்த பிரதமர் மோடி, மக்களை லட்சத்தீவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விளைவாக, கூகுள் தேடலில் லட்சத்தீவு முதலிடத்தில் இருந்தது.

லட்சத்தீவு குறித்த தகவல்களை கூகுளில் ஏராளமானோர் சேகரித்து வருவதால், வரும் காலங்களில் லட்சத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் இந்த முயற்சி, சில காலமாக இந்தியாவுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் மாலத்தீவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.

மாலத்தீவுகளின் சுற்றுலாத் துறைக்கு இந்தியா முக்கிய பங்களிக்கிறது. ஆனாலும், மாலத்தீவு அரசு சில காலமாக இந்தியாவுடன் விரோத போக்கை கையாள்கிறது. மாலத்தீவின் புதிய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவாக உள்ளது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

இந்த பின்னணியில், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணமும், அங்கு செல்லுமாறு அவர் விடுத்துள்ள வேண்டுகோளும் அமைந்துள்ளது. பிரதமரின் அழைப்பை ஏற்று பலரும் லட்சத்தீவுக்கு சென்றால்,  அது மாலத்தீவுக்கு நேரடி இழப்பாக அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், ஏராளமான இந்தியர்கள் தங்களது மாலத்தீவு விடுமுறை திட்டங்களை ரத்து செய்து வருகின்றனர். இந்தியா மற்றும் இந்தியர்கள் குறித்து மாலத்தீவு அமைச்சர்களின் இழிவான கருத்துக்களைத் தொடர்ந்து, ஏராளமான இந்தியர்கள் மாலத்தீவு விடுமுறை திட்டங்களை ரத்து செய்து வருகின்றனர்.

 

 

முன்னதாக, பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பலரும் அதன் அழகை விவரித்தனர். அவரது பயணம் மாலத்தீவின் சுற்றுலாவுக்கு பின்னடைவாக அமையும் எனவும், லட்சத்தீவின் சுற்றுலாவை அதிகரிக்கும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அதுபோன்று, எக்ஸ் பயனர் ஒருவர் பதிவுக்கு கருத்து தெரிவித்த மாலத்தீவு இளைஞர் அதிகாரமளித்தல், தகவல் மற்றும் கலைத்துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோடியை ‘கோமாளி’ என்றும், ‘இஸ்ரேலின் கைப்பாவை’ என்றும் குறிப்பிட்டு, அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டார்.

 

 

 

 

 

 

இத்தனைக்கும், பிரதமர் மோடி தனது ட்வீட்களில் மாலத்தீவு பற்றி எங்கும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மரியம் ஷியுனாவின் பதிவு சர்ச்சையான நிலையில், அதனை உடனடியாக அவர் நீக்கி விட்டார். அதேபோல், இன்னுமொரு பதிவில், மாலத்தீவிற்கு இந்திய இராணுவத்தின் இருப்பு தேவையில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Large number of Indians cancel their Maldives holiday plan after their ministers disparaging comments smp

Large number of Indians cancel their Maldives holiday plan after their ministers disparaging comments smp

இதேபோல், மாலத்தீவின் மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் சமூக ஊடகங்களில் இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் எதிராக அருவருப்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மாலத்தீவின் ஆளும் முற்போக்குக் கட்சியின் (பிபிஎம்) கவுன்சில் உறுப்பினரான ஜாஹித் ரமீஸும் இந்தியர்களை கேலி செய்து பதிவிட்டுள்ளார்.

அமைதியான கடற்கரைகள், தெளிவான கடல் நீர், வெள்ளை மணல், நட்பு மனிதர்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இயற்கை என இந்தியாவின் மிக அழகான இடங்களில் ஒன்றாக லட்சத்தீவு உள்ளது. இருப்பினும், லட்சத்தீவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாக உள்ளது. பயணக் கட்டுப்பாடுகள், நீண்ட ஆவணங்கள் மற்றும் தகவல் பற்றாக்குறை ஆகியவை இதற்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் லட்சத்தீவுக்கு ஒரு லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே வந்துள்ளனர். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அங்கு செல்வது மிகக் குறைவு.

ஆனால், இதுவே மாலத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுற்றுலாத் தலங்களைப் பார்த்தால், லட்சத்தீவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பளபளக்கும் கடல் நீர், வெள்ளை மணற்பரப்பு, பவளப்பாறைகள் என ஏராளமனவைகள் இரண்டு இடங்களிலுமே உள்ளன. ஆனாலும், பல இந்தியர்கள் லட்சத்தீவுக்குப் பதிலாக மாலத்தீவுக்குச் சென்று சுற்றிப்பார்க்கிறார்கள்.

ரூ.16,000 முதலீடு செய்யும் வின்ஃபாஸ்ட் நிறுவனம்: ஆய்வு செய்ததா தமிழக அரசு? பாஜக கேள்வி!

 2021 ஆம் ஆண்டில் 2.91 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களும், 2022 ஆம் ஆண்டில் 2.41 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மாலத்தீவுகளுக்குச் சென்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி வரை இந்திய சுற்றுலாப் பயணிகள் 1,00,915 பேர் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

அதன்படி, மாலத்தீவுகளின் சுற்றுலாத் துறைக்கு இந்தியா முக்கிய பங்களிக்கிறது. ஆனாலும், மாலத்தீவு அரசு சில காலமாக இந்தியாவுடன் விரோத போக்கை கையாள்கிறது. இந்த பின்னணியில், பிரதமர் மோடியின் லட்சத்தீவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் அழைப்பை ஏற்று பலரும் லட்சத்தீவுக்கு சென்றால்,  அது மாலத்தீவுக்கு நேரடி இழப்பாக அமையும். மாலத்தீவு சுற்றுலாவை விட லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்வது மிகவும் மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios