நில மோசடி ஊழல் வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இன்று சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. கர்ப்பிணியாக இருக்கும் அவரது மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதால் அவர் இன்று சிபிஐ முன்பு ஆஜராகவில்லை. 

அமலாக்கத்துறை தொடர்ந்து நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் டெல்லியில் இருக்கும் அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டது. இதனால், கர்ப்பிணியாக இருக்கும் அவரது மனைவிக்கு சோர்வு ஏற்பட்டு, பிபி குறைந்து மயக்கம் அடைந்து விழுந்துவிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டு தேஜஸ்வியின் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேஜஸ்வியின் பெற்றோரும் முன்னாள் முதல்வர்களுமான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவியிடம் தனித்தனியாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு இருந்தது. டெல்லியில் தனது மகள் வீட்டில் தங்கி இருக்கும் லாலுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பீகாரில் வைத்து ராப்ரி தேவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், விசாரணைக்கு சனிக்கிழமை (இன்று) நேரில் ஆஜராகுமாறு தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோஹித் ஜோஷி ராஜினாமா!!

சிபிஐ அனுப்பிய இரண்டாவது சம்மன் ஆகும் இது. இதற்கு முன்பு பிப்ரவரி 4ஆம் தேதியும் ஆஜராகுமாறு தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. டெல்லியில் இருக்கும் தேஜஸ்வியின் வீட்டில் சோதனை நடத்தியதை அடுத்து, நில மோசடி ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிபிஐயும் சம்மன் அனுப்பியது. 

இந்த வழக்கில் ஏற்கனவே பிரசாத், ராப்ரி தேவி மற்றும் 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்ற சதி, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் வரும் மார்ச் 15 நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது. 

கேசிஆரின் மகள் கவிதா ஆஜர்.. அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி 144 தடை