Asianet News TamilAsianet News Tamil

இன்னும் எத்தனதான் இருக்கு...? 3-வது வழக்கிலும் லாலு குற்றவாளி! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

Lalu Prasad Yadav guilty The CBI court ruled
Lalu Prasad Yadav guilty The CBI court ruled
Author
First Published Jan 24, 2018, 11:57 AM IST


பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மீதான 3-வது வழக்கிலும் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.

பீகார் மாநில முதலமைச்சராக 1990 - 1997 வரை லாலு பதவி வகித்தபோது, கால்நடை தீவன திட்டத்தில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாலு மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

லாலு மீதான இந்த வழக்குகளை 1996 ஆம் ஆண்டு முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. இதன் முதல் வழக்கில் 2013 ஆம் ஆண்டு லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் லாலு அடைக்கப்பட்டார். இதன் பின்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவர் ஜாமின் பெற்றார்.

இதன் 2-வது வழக்கில், தியோகர் மாவட்ட அரசு கஜானாவில் இருந்து சட்டவிரோதமாக ரூ.89.27 லட்சம் பரிமாற்றம் செய்த வழக்கில், லாலு, மற்றொரு முன்னாள் முதலமைச்சரான ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

லாலு மற்றும் 3 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லாலுவுக்கு மூன்றரை ஆண்டுக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லாலு மற்றும் ஜெகன்நாத் மிஸ்ரா மீதான கால்நடை தீவன 3-வது ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சிபிஐ நீதிமன்றம், லாலு குற்றவாளி என தீர்ப்பளித்தது. 

மற்றொரு முன்னாள் முதலமைச்சரான ஜெகன்நாத் மிஸ்ராவும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios