Asianet News TamilAsianet News Tamil

சிறையில் தோட்ட வேலை பார்க்கும் லாலு பிரசாத்

lalu prasad yadav doing gardening work in prison
lalu prasad yadav doing gardening work in prison
Author
First Published Jan 7, 2018, 5:56 PM IST


கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லாலுவுக்கு சிறையில் தோட்ட வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. 

கால் நடை தீவன ஊழல் வழக்கில் நீண்ட கால விசாரணைக்குப்பின் பீகார் முன்னாள் முதல்-அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் மூன்றரை ஆண்டு சிறை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
குடும்பத்தினரும்...

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாலு அவரது டுவிட்டரில், ‘‘பா.ஜ.,கொள்கைகளை பின்பற்றி வாழ்வதை விட சிறையில் சாவதே மேல். சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’ என கூறியிருந்தார். 

அவரது மகன் தேஜஸ்வி, தீர்ப்பை எதிரத்து மேல் முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு வழக்குகளில் சிறை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தோட்ட வேலை
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு சிறையில் தோட்ட வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளார். காலை 9 மணி முதல் 3 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் அவர் தோட்ட வேலை செய்ய வேண்டும். 

இதற்காக அவருக்கு ஒரு நாளைக்கு 93 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios