லக்கிம்பூர் கெரி வன்முறை:மத்திய அமைச்சர் மகனுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
Lakhimpur Kheri violence case:உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் விவசாயிகள் 4பேரை ஜீப்பில் மோதி நசுக்கி கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜெய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.

Lakhimpur Kheri violence case: உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் விவசாயிகள் 4பேரை ஜீப்பில் மோதி நசுக்கி கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜெய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, லக்கிம்பூர் கெரி மாவட்டம், திகுனியா கிராமத்துக்கு வந்த உ.பி. துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவுக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி மத்திய அமைச்சர் ஆஷிஸ் மிஸ்ரா ஜீப் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் ஜீப்பில் அடிபட்டு 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.
டெல்லி ஜேஎன்யு-வில் பிரதமர் மோடி ஆவணப்படத்துக்குத் தடை: மாணவர்கள் போராட்டம், கல்வீச்சு
ஆத்திரமடைந்த விவசாயிகள் மத்திய அமைச்சர் மகன் ஓட்டிவந்த காரை தாக்கினர். இதில் பாஜக தொண்டர்கள் இருவர், ஒரு பத்திரிகையாளர், ஓட்டுநர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் காரில் இருந்தது மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா என்பது தெரியவந்ததையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆஷிஸ் மிஸ்ரா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஆஷிஸ் மிஸ்ரா மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதில் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை, கொலைச்சதி, கொலை முயற்சி, சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுதல், ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருத்தல், மோட்டார்வாகனச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப்பின் உச்ச நீதிமன்றம், மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜேகே மகேஷ்வரி ஆகியோர் இந்த வழக்கில் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினர்.
- இதன்படி, “ மனுதாரர் ஆஷிஸ் மிஸ்ரா பிணை பத்திரம் எழுதிக் கொடுத்தபின் விசாரணை நீதிமன்றம் மனநிறைவு அடைந்தால் 8 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படும்.
- சாட்சியங்கள் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவிதமான தாக்கத்தையும், அழுத்தத்தையும் ஆஷிஸ் மிஸ்ரா செலுத்தக்கூடாது.
- இடைக்கால ஜாமீன் வழங்கிய ஒரு வாரத்துக்குள் ஆஷிஸ் மிஸ்ரா உத்தரப்பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும்.
- விசாரணை நீதிமன்றத்தில் ஆஷிஸ் மிஸ்ரா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்காக மட்டுமே உத்தரப்பிரதேசத்துக்குள் வரவேண்டும்.
- சாட்சியங்கள் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ மனுதாரரோ அல்லதுஅவரைச் சேர்ந்தவர்களோ, பெற்றோரோ, உறவினர்களோ தாக்கம் செலுத்தினால், அச்சுறுத்தினால், இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படும்.
- ஆஷிஸ் மிஸ்ரா எங்கு தங்கியுள்ளார் என்பதை விசாரணை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு உட்பட்ட காவல்நிலையத்துக்கும் தெரிவிக்க வேண்டும்.
- ஆஷிஸ் மிஸ்ரா தங்கியிருக்கும் பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு வாரம் ஒருமுறை சென்று தன்னுடைய இருப்பை தெரிவிக்க வேண்டும்.
- விசாரணை நீதிமன்றத்துக்கு மனுதாரரின் வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். விசாரணையின் ஒவ்வொரு கட்டம், சாட்சியளின் வாக்குமூலம் ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவேண்டும்.
என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை வரும் மார்ச் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
- 2021 Lakhimpur Kheri violence
- Lakhimpur Kheri
- Lakhimpur Kheri violence case
- Supreme Court
- Union minister Ajay Kumar Mishra
- Union minister Ajay Kumar Mishra son Ashish Mishra
- lakhimpur kheri case
- lakhimpur kheri district
- lakhimpur kheri farmers
- lakhimpur kheri incident
- lakhimpur kheri latest news
- lakhimpur kheri news
- lakhimpur kheri video
- lakhimpur kheri violence
- lakhimpur kheri violence latest news updates
- lakhimpur khiri violence
- lakhimpur violence
- protests in lakhimpur kheri turn violent
- violence in up's lakhimpur kheri
- violence in uttar pradesh's lakhimpur kheri
- violence lakhimpur kheri