lady police raoed by a man in banngalore

பெங்களூருவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் போலீசை பல முறை கற்பழித்த இளைஞரை போலீஸ் தேடி வருகிறது.

பெங்களூரு நகரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வரும் 26 வயது பெண் மஞ்சுளா. . இவருக்கும், பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டியை சேர்ந்த அமீன்ஷாப் என்பவருக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் அடிக்கடி பார்த்து பேசி பழக்கமாயினர். இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது.. மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக அமீன்ஷாப் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். அத்துடன் பெங்களூரை அடுத்த உப்பார்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து அந்த பெண்ணை, அமீன்ஷாப் பல முறை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மஞ்சுளா வேறு சாதியை சேர்ந்தவர் என்பதாலும், அவரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி அமீன்ஷாப் திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேலும் அமீன்ஷாப்பின் குடும்பத்தினர் பெண் போலீஸ் மஞ்சுளாவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்தில், பெண் போலீஸ் மஞ்சுளா அமீன்ஷாப் மற்றும் , அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில், அமீன்ஷாப், அவரது தாய் காதுன்பீவி, சகோதரி மும்தாஜ் மீது உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெண் போலீசையே ஏமாற்றி கற்பழித்துவிட்டு தற்போது திருமணம் செய்ய இளைஞர் மறுத்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.