Asianet News TamilAsianet News Tamil

வலிப்பு வந்து மயங்கிய டிரைவர்..பஸ்ஸை ஓட்டிய சிங்கப்பெண் ..திக்..திக்.. நிமிடங்கள்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட, சமயோஜிதமாக பெண் பயணி ஒருவர், 25 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்தை தானே ஓட்டி சென்று டிரைவருக்கு முதலுதவி கிடைக்கச் செய்ததோடு மட்டுமில்லாமல் 20 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Lady passenger drive bus in Maharashtra
Author
Maharashtra, First Published Jan 17, 2022, 7:29 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட, சமயோஜிதமாக பெண் பயணி ஒருவர், 25 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்தை தானே ஓட்டி சென்று டிரைவருக்கு முதலுதவி கிடைக்கச் செய்ததோடு மட்டுமில்லாமல் 20 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே வகோலி என்ற இடத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், அங்குள்ள மொராச்சி சிஞ்ச்சோலி என்ற இடத்திற்கு மினி பஸ்ஸில் பிக்னிக் சென்றுள்ளனர். மாலை 5 மணிக்கு அனைவரும் வீடு திரும்ப பஸ்ஸில் ஏறினர். பஸ் சிறிது தூரம் சென்ற நிலையில் அதனை ஓட்டிய டிரைவருக்கு திடீரென்று உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கண்பார்வை மங்கி மயக்கம் வருவது போன்று இருப்பதாகவும், தன்னால் எதையும் பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறியதாக சொல்லபடுகிறது. 

Lady passenger drive bus in Maharashtra

பேருந்தை மேற்கொண்டு சரியாக ஓட்ட முடியாமல் டிரைவர் திணறியுள்ளார். இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் பதற்றத்தில் என்ன செய்து என்று தெரியாமல் கூச்சலிட்டுள்ளனர். அந்தப் பதற்றமான சூழ்நிலையில், டிரைவர் சீட்டிற்கு பின்புற சீட்டில் அமர்ந்திருந்த யோகிதா என்ற 42 வயது பெண், உடனடியாக விரைந்து செயல்பட்டு டிரைவரிடம் சென்று, விசாரித்துள்ளார். தன்னால் பஸ்ஸை ஓட்ட முடியவில்லை என்று சொன்னபடியே டிரைவர் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே யோகிதா ஸ்டியரிங்கை பிடித்துக்கொள்ள, அந்நேரம் மற்ற இரு பெண்கள் டிரைவரை அருகில் உள்ள இருக்கைக்கு மாற்றினர். பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உறைந்து போனர். யோகிதா, தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்றும், தானே பஸ்ஸை ஓட்டுவதாகவும் தெரிவித்தார். மற்ற பயணிகளும் வேறு வழியில்லாமல் பஸ்ஸை யோகிதா ஓட்டும்படி கேட்டுக்கொண்டனர்.

யோகிதா வாழ்க்கையில் முதன்முறையாக பஸ்ஸை, அதுவும் குண்டும் குழியுமான சாலையில் இயக்க ஆரம்பித்தார். பயணிகள் அனைவரும் தொடர்ந்து அச்சத்திலேயே இருந்தனர். மாலை நேரம் என்பதால் இருட்டாகிவிட்டது. இரவு நேரத்தில் கார் ஓட்டியே அனுபவம் இல்லாத நிலையிலும், யோகிதா பஸ்ஸை நம்பிக்கையுடன் ஓட்டினார். 25 கிலோ மீட்டர் தூரம் வரை பஸ்ஸை ஓட்டி, டிரைவருக்கு முதலுதவி கிடைக்கச் செய்து, 20 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios