வங்கியில் 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என வங்கி அதிகாரிகள் சொன்னதை கேள்விபட்ட பெண், வங்கியின் வாசலிலேயே உயிரிழந்துள்ளார்.
குஷிநகர் மாவட்டம் கோரக்பூரைச் சேர்ந்த துணி சலவை செய்யும் பணிபுரியும் 40 வயது தீர்த்தராஜி எனும் பெண். தனது கணக்கில் சேமிப்பதற்காக இரண்டு 1,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிக்கு எடுத்து சென்றவரிடம், வங்கி ஊழியர் இனிமேல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொல்வதைக் கேட்டவுடன், அதிர்ச்சியில் வங்கிக்கு வெளியே மயக்கமடைந்து விழுந்து உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
குஷிநகர் மாவட்ட மேஜிஸ்திரேட், இறந்த தீர்த்தராஜியின் வீட்டிற்கு சென்று விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது அதிர்ச்சியின் மூலமாக நடைபெற்ற சம்பவம் என்பது உறுதிசெய்யப்பட்டால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.
இதேபோல், மற்றொரு சம்பவத்தில், மஹுவா மஃபி கிராமத்தில், 8 வயது சிறுமிக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் வழியில், அவரது தந்தை பெட்ரோல் நிரப்பச் சென்று 1,000 ரூபாய் நோட்டைக் கொடுத்து, பெட்ரோல் வங்கியில் சில்லறை பெற காலதாமதம் ஆனதால் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
