2025 மகா கும்ப மேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜில் சிறப்பு மாநாடு!
அக்டோபர் 25-27, 2024 வரை பிரயாக்ராஜில் மூன்றாவது கும்ப மேளா மாநாடு நடைபெறும். 2025 மகா கும்ப மேளாவுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். இந்திய மற்றும் சர்வதேச அறிஞர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
மகா கும்ப மேளா வெறும் மத நிகழ்வு மட்டுமல்ல, நமது நாட்டின் ஆன்மீக, கலாச்சார, சமூக மற்றும் சித்தாந்த பன்முகத்தன்மையின் பிரதிபலிப்பாகும். கும்ப மேளாவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, யுனெஸ்கோ இதை பாரம்பரிய நிகழ்வாக அங்கீகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டு நடைபெறும் மகா கும்ப மேளாவை உலகம் முழுவதிலும் கொண்டு செல்ல கும்ப மேளா மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது. மூன்றாவது கும்ப மேளா மாநாடு அக்டோபர் 25 முதல் 27 வரை பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெறும். MNNIT-யின் இனோவேஷன் மற்றும் இன்குபேஷன் மையம் மற்றும் இந்தியா திங்க் கவுன்சில் சார்பில் இந்த நிகழ்வு நடைபெறும். இதில் உத்தரபிரதேச சுற்றுலாத் துறையும் பங்கேற்கும்.
இது குறித்துப் பேசியுள்ள இந்தியா திங்க் கவுன்சிலின் இயக்குனர் டாக்டர் சௌரப், இந்த மூன்று நாள் மாநாட்டில் 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறும் என்றும், அதில் இந்திய மற்றும் சர்வதேச அறிஞர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ரயிலில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாகப் பயணம் செய்யலாம்!
மாநாட்டில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொள்வார். மாநாட்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், பரமார்த் நிகேதன் ஹரித்வாரின் தலைவர் சுவாமி சிதானந்த முனி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் உத்தர பிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் ஜெய்வீர் சிங் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் கும்ப மேளா மாநாட்டில் 11 அமர்வுகளில் அகாடா, ஆசிரமம், செயற்கை நுண்ணறிவு, உணவுப் பாதுகாப்பு, கோயில் பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவு ஆகிய கருப்பொருள்களில் கருத்தரங்குகள் நடைபெறும். இதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வல்லுநர்கள் கலந்துகொள்கிறார்கள்.
பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மாதம் ரூ.5,500 கிடைக்கும்! இப்பவே அப்ளை பண்ணுங்க!