Asianet News TamilAsianet News Tamil

குமாரசாமி அரசு நாளை கலைவது உறுதி... 15 எம்.எல்.ஏக்கள் எடுத்த அதிரடி முடிவு..!

கர்நாடகாவில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை என்று கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
 

Kumaraswamy government is sure to dissolve tomorrow
Author
Andhra Pradesh, First Published Jul 17, 2019, 1:59 PM IST

கர்நாடகாவில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை என்று கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.Kumaraswamy government is sure to dissolve tomorrow

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி அரசுக்கு எதிராக 15 எம்.எல்.ஏ.க்கள் திரும்பி உள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ், ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  Kumaraswamy government is sure to dissolve tomorrow

ஆனால், ராஜினாமா மீது சபாநாயகர் முடிவு எடுக்கவில்லை. இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். உச்ச நீதிமன்றமும், சபாநாயகர் முடிவு எடுக்க வற்புறுத்த முடியாது என்று தெரிவித்து விட்டது. மேலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. Kumaraswamy government is sure to dissolve tomorrow

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பங்கேற்க போவதில்லை என்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் பேட்டி அளித்தனர். சட்டமன்றத்திற்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள், “உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். 15 பேரும் ஒற்றுமையுடன், எங்களது முடிவில் உறுதியாக இருக்கிறோம்” என்றனர். இதனால் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios