கிருஷ்ணராஜசாகர் அணையில் நிரம்பிய 35 டி.எம்.சி. தண்ணீர்... தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் எப்போது கிடைக்கும்?
கிருஷ்ணராஜசாகர் அணியில் 35 டிஎம்சி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஆனால், பெங்களூருக்கு மாதம் தோறும் 1.5 டிஎம்சி குடிநீர் தேவைப்படும்.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் தற்போது 35 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ளதால், அடுத்த கோடை வரை பெங்களூரு நிம்மதி பெருமூச்சு விடலாம் என பெங்களூரு ஜலமண்டலி தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள 1.3 கோடி மக்கள் குடிநீருக்காக ஜீவநதி காவேரியை நம்பியுள்ள நிலையில் கேஆர்எஸ் அணி நிரம்பிந்து அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கர்நாடாக அணைகளில் கடந்த ஆண்டை விட நீர்மட்டம் குறைந்ததால், பெங்களூரு மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். கடந்த ஒரு மாதமாக பருவமழை தீவிரம் அடைந்து மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்திருக்கிறது. இதனால், நகருக்குத் தேவையான குடிநீர் கிடைத்துவிட்டது. அடுத்த கோடை வரை பெங்களூரு குடிமக்கள் கவலை இல்லாமல் இருக்க முடியும்.
அரக்கப் பறக்க வருமானவரித் தாக்கல்! கடைசி நாளில் புதிய சாதனை! இனி ரூ.5000 அபராதம்!
ஜூலை மாதம் முதல் பெய்த தொடர் கனமழையால் கே.ஆர்.எஸ் அணையில் போதிய தண்ணீர் இருப்பதால், 2024 கோடை வரை குடிநீர் பிரச்னை ஏற்படாது. ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க, கூடுதலாக மழை பெய்ய வேண்டும் என்று கர்நாடக ஜலமண்டலி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கே.ஆர்.எஸ் அணையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரு குடிமக்கள் குடிநீரை விணாக்காமல் சிக்கனமாக இருப்பதில் கவனமாக இருக்குமாறு ஜலமண்டலி கேட்டுக் கொண்டது. அந்த அறிவிப்பிற்குப் பிறகு, கர்நாடகாவில் பருவமழை அதிகரித்தது. தொடர் மழையால் கர்நாடகாவின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதன் விளைவாக கிருஷ்ணராஜசாகர் அணியில் 35 டிஎம்சி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. பெங்களூரு மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 1.5 டிஎம்சி குடிநீர் தேவைப்படும் என்றும் அதனால், இப்போது இருக்கும் தண்ணீரை வைத்து அடுத்த ஆண்டு கோடை காலம் வரை மட்டுமே தண்ணீரை வழங்க முடியும் என்றும் சொல்லபடுகிறது. ஜலமண்டலியின் இந்த அறிவிப்பு பெங்களூரு குடிமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
ஆனால், கர்நாடகாவில் உபரி நீர் சேரும் வரை மழை பெய்தால்தான் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழக விவசாயிகள் தொடர்ந்து காத்திருக்க வேண்டிய சூழல்தான் உள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்! சம்பளம் மற்றும் EMI பேமெண்ட்களை பாதிக்கும்!