Krnataka Election Notta defeated AIADMK

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. அதிமுக பெற்ற வாக்குகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

கர்நாடகாவில் மே 12 ஆம் தேதி 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரையில்லாத வகையில் மிக அதிக அளவு வாக்குப்பதிவானது. 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம் 37 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றிருந்த நிலையில் 104 இடங்களைப் பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் 110-க்கும் அதிகமான இடத்தில் பாஜக முன்னிலை வகித்தது. இதனால் அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற நிலை உருவானது. 

தற்போது வரை பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறாதாதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் 78 தொகுதியிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 38 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது

காங்கிரஸ் தலைமை குலாம் நபி ஆசாத் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்படிக்கை ஏற்றபட்டதில் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குமாரசாமி முதலமைச்சராக நிபந்தனையின்றி காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஆளுநரை சந்தித்து உரிமையும் கோரியுள்ளனர். இந்த நிலையில் பா.ஜ.கவின் எடியூரப்பா அதிக தொகுதியில் வென்றதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இதற்கு ஆளூநர் பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் தந்துள்ளார். தனிப்பெரும்பான்மையை கட்டாயம் பா.ஜ.க நிரூபிக்கும் என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க ஹனூர் தொகுதியில் அதிமுக போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பாக ஆர்.பி.விஷ்ணுகுமார் போட்டியிட்டார். ஆனால் விஷ்ணுகுமார் 503 வாக்குகள் மட்டுமே பெற்றார். அந்த தொகுதியில் நோட்டாவிற்கு மட்டும் 1373 வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிமுகவைவிட 870 வாக்குகளை நோட்டே பெற்றுள்ளது.

காந்தி நகர் தொகுதியில் அதிமுகவுக்கு 435 பேர் வாக்களித்துள்ளனர். காந்தி நகரில் நோட்டாவுக்கு 1223 வாக்குகள் பெற்றுள்ளன. கே.ஜி.எப் வேட்பாளர் அன்பு 719 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கு நோட்டாவுக்கு 1156 வாக்குகள் கிடைத்துள்ளன. ஹானூர், கேஜிஎப், காந்திநகர் ஆகிய 3 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.