Asianet News TamilAsianet News Tamil

கொல்கத்தா மாடல் அழகி கொடூர கொலை... ஓலா டிரைவர் அதிரடி கைது..!

பெங்களூரு விமான நிலையத்தில் மாடல் அழகி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் ஓலா டிரைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Kolkata model girl murder...Ola driver arrest
Author
Bangalore, First Published Aug 25, 2019, 11:30 AM IST

பெங்களூரு விமான நிலையத்தில் மாடல் அழகி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் ஓலா டிரைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

பெங்களூரில் உள்ள கெம்பேவுடா சர்வதேச விமான நிலையத்தின் அருகே கடந்த ஜூலை 31-ம் தேதி பெண் சடலம் ஒன்று கிடந்தது. அந்த பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியும், தலையில் பலத்த காயம் இருந்தது. போலீசார் அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அப்பெண் யார் என தெரியவில்லை இதையடுத்து போலீசார் டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்து அதன்படி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகி பூஜா சிங் தே என்பது தெரியவந்தது. Kolkata model girl murder...Ola driver arrest

இந்நிலையில், மாடல் அழகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஓலா கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில் கடந்த ஜூலை 30-ம் தேதி பெங்களூரில் ஒரு ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த பூஜா, நிகழ்ச்சி முடிந்த பின் மறுபடியும்  கொல்கத்தா செல்ல ஓலா கால் டாக்ஸியை செல்போன் மூலம் அழைத்து உள்ளார்.

அப்போது, டாக்சி டிரைவராக நாகேஷு என்பவர் பூஜாவை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். காரில் இருந்த பூஜா அழகாகவும், பணக்கார வீட்டுப்பெண் போல இருந்தாலும் டிரைவர் பூஜா கையில் இருக்கும் பையில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என எண்ணியுள்ளார். மேலும், நாம் ஒரே நாளில் பணக்காரனாகி விடலாம் நாகேஷு நினைத்தார். ஆகையால், சவாரியின் போது பூஜாவிடம் டிரைவர் மிரட்டி அதிக பணம் கேட்டுள்ளார். அதற்கு பூஜா தர மறுத்துள்ளார். Kolkata model girl murder...Ola driver arrest

இதனால், டிரைவர் நாகேஷ் பூஜாவை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியதில் பூஜா மயங்கி விழுந்தார். பின்னர் பூஜா மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார். பின்னர்,  அவரை கத்தியால் சரமாரியாக பூஜாவை குத்தி கொலை செய்துவிட்டு கைப்பையை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அதில் வெறும் 500 ரூபாய் பணம் மட்டும் இரண்டு மொபைல் போன்கள் மட்டுமே இருந்துள்ளன. இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக கேப் டிரைவர் நாகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios