Asianet News TamilAsianet News Tamil

படிப்பு செலவுக்கு மீன் விற்ற கல்லூரி மாணவிக்கு குவியும் வாழ்த்துகள்... படத்தில் நடிக்க வாய்ப்பு!

கல்லூரி உடையில் மீன் விற்பனை செய்த மாணவி ஹனன் ஹமீத்க்கு கேரளாவே துணை நிற்கும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

Kochi student Hanan Hamid meets Kerala CM Pinarayi Vijayan

கல்லூரி உடையில் மீன் விற்பனை செய்த மாணவி ஹனன் ஹமீத்க்கு கேரளாவே துணை நிற்கும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளம் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. படித்து வருகிறார் ஹமித் ஹனன். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய படிப்பு தேவைக்காக காலையிலும் மாலையில் கல்லூரிக்கு நேரத்திற்கு முன்னும் பின்னும் மீன் விற்கிறார். இவரை குறித்து மலையாள நாளிதழான மாத்ரூபூமி கட்டுரை வெளியிட்டது. கேரளா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரது பேட்டி கட்டுரையை படித்து பாராட்டி தள்ளினார்கள். கேரளா மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் அவர் பிரபலமானார்.

Kochi student Hanan Hamid meets Kerala CM Pinarayi Vijayan

எர்ணாகுளம் அருகே உள்ள தொடுபுழாவைச் சேர்ந்த ஹனன் ஹமித், அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். கல்லூரி நேரம் போக மாலை நேரங்களில் மீன் விற்பனை செய்து தன் படிப்பு செலவையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறார். ஹனனின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர்.

தாய் உடல்நலம் சரியில்லாதவர் என்பதால் அத்துனை வேலைகளையும் இவரே கவனிக்க வேண்டியுள்ளது. இவர் மீன் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமானதை தொடர்ந்து, இவரைப் பற்றி பல ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இவரை சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து மனமுடைந்த ஹனன், சமூக வலைதளத்தில் தன்னை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், ஹனனை விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Kochi student Hanan Hamid meets Kerala CM Pinarayi Vijayan

இதுகுறித்து அவர், படிப்பதற்காக உழைக்கும் அந்த மாணவியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவரை விமர்சனம் செய்யும் நபர்கள் எல்லாம் அவரின் சாதனையை ஏற்க முடியாதவர்கள். கேரள அரசாங்கம் அவருக்கு துணை நிற்கும், பாதுகாப்பு அளிக்கும். அந்த மாணவியை விமர்சிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

 மேலும் இயக்குனர் அருண் கோபி, மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கும் படத்தில் ஹனனுக்கு வாய்ப்பு அளிக்க இருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios