Asianet News TamilAsianet News Tamil

மக்கள் மனதை கவர்ந்த Food Vlogger ராகுல்.. அவரது வீட்டில் இறந்த கிடந்த சோகம் - என்ன நடந்தது?

Kochi : கொச்சியை சேர்ந்த பிரபல Food Vlogger ராகுல், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, அவரது வீட்டில் இறந்து கிடந்தது பெரும் அதியர்ச்சியையும், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Kochi Famous Food Vlogger Rahul found dead in his residence on friday ans
Author
First Published Nov 4, 2023, 12:22 PM IST | Last Updated Nov 4, 2023, 12:22 PM IST

மாறி வரும் இந்த காலகட்டத்தில், மக்களின் வாழ்கை முறையும் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது, 9 to 5 வாழ்கை முறை பெருமளவு குறைந்து, சொந்தமான தொழில் துவங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இணைய வழியில் தங்களுக்கு பிடித்ததை செய்து, அதன் மூலம் வருவாய் ஈட்டி மக்கள் வாழ பழகி வருகின்றனர். 

அந்த வகையில் "வீடியோ ப்ளாகிங்" ஒரு மிகப்பெரிய ட்ரெண்டாக மாறியுள்ளது, அந்த வகையில் கொச்சியை சேர்ந்த ராகுல் என்ற Food Vloggerக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ராகுல் என் குட்டி மாதவனத்தில் உள்ள அவரது வீட்டில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மை: பிரதமர் மோடி பெருமிதம்! 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற இன்ஸ்டகிராம் பக்கமான 'ஈட் கொச்சி ஈட்' வீடியோக்கள் மூலம் உணவுப் பிரியர்களுக்கு அவர் பரிச்சயமான நபராக இருந்து வந்தார். உணவு பிரியர்களையும், சமூகங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியான சமையல் கலாச்சாரத்தின் உறுப்பினராகவும் ராகுல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Eat Kochi Eat (@eatkochieat)

இறுதியாக கடந்த புதன் கிழமை அன்று உணவு வ்லாக் பற்றிய அவரது கடைசி வீடியோ வெளியிடப்பட்டது. ஈட் கொச்சி ஈட்-டின் 'ஓ கொச்சி' வீடியோக்களிலும் அவர் அடிக்கடி தோன்றுவார், இது கொச்சியில் உள்ள புதிய விஷயங்களை பற்றி அறிய உதவும் ரீல்களைப் பகிரும் ஒரு பக்கமாகும்.

Eat Kochi Eat சமூக ஊடக தளங்களில் ஒரு இடுகையின் மூலம் அவருடைய இறப்பு செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. அந்த பக்கத்தில் வெளியான பதிவில் "தயவுசெய்து அவரை உங்கள் பிரார்த்தனையில் வைத்திருங்கள், இந்த அழகான ஆன்மாவின் இழப்பைத் தாங்கும் வலிமையை நாங்களும் அவரது குடும்பத்தினரும் பெற விரும்புகிறோம்," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைபர் கிரிமனலாக மாறிய காய்கறி வியாபாரி.. மக்களை ஏமாற்றி 6 மாதத்தில் 21 கோடி சம்பாதித்தது எப்படி?

பல ஃபுட் விலாகர்களும் தங்கள் இரங்கலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். மறைந்த ராகுல், கொச்சியில் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios