வந்தே பாரத் ஸ்லீப்பர், மெட்ரோ, சாதரண ரயில்கள்: எப்போது அறிமுகம்?
வந்தே பாரத் ஸ்லீப்பர், மெட்ரோ, சாதரண ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே தயாராகி வருகிறது
வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், வந்தே பாரதின் சில வித்தியாசமான பதிப்புகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. அதன்படி, வந்தே பாரத் சாதாரண ரயில், வந்தே மெட்ரோ ரயில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே தயாராகி வருகிறது.
வந்தே பாரத் சதாரண ரயில் மற்றும் வந்தே பாரத் மெட்ரோ ரயில் ஆகியவற்றுடன், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் முதல் பதிப்பை இந்த நிதியாண்டில் வெளியிட இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ரயில்களின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ரயில்கள் வருகிற மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். அதில் 11 ஏசி 3 டயர், 4 ஏசி 2 டயர் பெட்டிகள் இருக்கும். ஏசி 1ஆவது வகுப்புக்கு 1 பெட்டி ஒதுக்கப்படும். இந்த ரயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன் தயாராகி விடும். அதன் பிறகு, முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்படும். சோதனையில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அது சரி செய்யப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
வந்தே பாரத் மெட்ரோ ரயில்
வந்தே மெட்ரோ ரயிலுக்கான பணிள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இதை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வந்தே பாரத் சதாரண ரயில்
வந்தே பாரத் சதாரண ரயில் என்பது அதன் எளிய ரயில்கள் ஆகும். இது புஷ்-புல் ரயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஏசி அல்லாத வந்தே பாரத் சதாரண ரயில்கள் இந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இத்தகைய ரயில்களில் 22 பெட்டிகள் மற்றும் இரண்டு இன்ஜின்கள் இருக்கும். அக்டோபர் 15ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் அனைத்து சோதனைகளும் முடிந்து, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும்.
தரமற்ற சாலைகள்: நேரடியாக களத்தில் இறங்கும் முதல்வர் ஸ்டாலின் - அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
வந்தே பாரத் சாதாரண ரயில், வந்தே மெட்ரோ ரயில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் குறித்து பேசிய ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கூறுகையில், “இந்த நிதியாண்டிற்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர், வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம். வந்தே பாரத் சாதாரண ரயில்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்தப்படும்.” என்றார்.
வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகையில், தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.