kk venugopal appointed general attorney
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரோத்கி பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய தலைமை வழக்கறிஞராக வேணு கோபால் நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று 15 ஆவது அட்டர்னி ஜெனரலாக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்திய அரசின் அட்டானி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்கியின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞரும், சட்ட வல்லுநருமான கே.கே.வேணு கோபால் நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதற்கான உத்தவை பிறப்பித்தார்.

தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட கோட்டயம் கட்டன்கோட் வேணு கோபால் கேரளாவை சேர்ந்தவர்.
கர்நாடக மாநிலம் மங்களூர், மைசூர் உள்ளிட்ட நகரங்களில் படிப்பை முடித்த வேணு கோபால், உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக வழக்கறிஞராக பணியாற்றியவர்.
1970களின் இறுதியில் மொரார்ஜி தேசாய் காலத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர்.
இதனிடையே மத்திய அரசின் 15-வது தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வேணுகோபால் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
