குழந்தைகளை கடத்தி அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்த கடத்தல் மன்னன் ராஜூபாயை மும்பை போலீசார் அதிரடி கைது செய்தனர்.

கடந்த 2007ம் ஆண்டு முதல், ராஜூபாய் என்பவர், குஜராத்தில் வறுமையில் வாழும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை கடத்தி விற்று  வந்துள்ளார்.

இது தொடர்பாக வந்த ரகசிய  புகாரை அடுத்து கடந்த மார்சி மாதம் முதல் ராஜூபாயை பிடிக்க  தனிப்படை போலீசார் நோட்டமிட்டு வந்துள்ளனர்.பின்னர் ராஜூபாய் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் எண்ணை கண்டறிந்து அதன் மூலம் அடியாட்கள் உடன் பேசும் செய்திகள் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு சில குற்றவாளிகளை கண்டு பிடித்தனர். 

அதில்,ரிஸ்வான் சோட்டானி, அப்சல் ஷெயிக், டாஜ்யூதின் கான் ஆகியவர்களுடன் காவலர் ஒருவரின் மகனான அமிர் கான் உள்ளிட்டோர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டு உள்ளதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பெறப்பட்ட விசாராணையில், "வறுமையான குடும்பங்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்கப்படும் குழந்தைகளுக்கு பாஸ்போர்டுகளை முறைகேடாக தயாரித்து அதன் மூலம் அமெரிக்காவிற்கு விற்பனை செய்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு பாஸ்போர்ட் முறைகேடு செய்ததாக ராஜூபாயை மும்பை போலீசார் கைதுசெய்து இருந்தனர். இந்நிலையில் குழந்தை கடத்தல் தொழிலில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஜூபாய் தலைமையிலான கும்பலை கைது செய்து கோர்ட் முன்பு ஆஜர் படுத்தி உள்ளனர். அதை தொடர்ந்து வரும் ஆக்ஸ்டு 18ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.