கொச்சி பல்கலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி; 40 க்கும் மேற்பட்டோர் காயம்

நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திறந்தவெளி அரங்கில் மழை பெய்ததால், வெளியே இருந்தவர்கள் அவசர அவசரமாக உள்ளே செல்ல முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Kerala Stampede at CUSAT fest; 4 dead, several injured sgb

எர்ணாகுளத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் டெக் ஃபெஸ்ட் விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 46 பேர் களமச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழாவில் நிகிதா காந்தி தலைமையில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்துள்ள நால்வரில் இரண்டு பேர் பெண்கள்; இரண்டு பேர் சிறுவர்கள். ஆனால், இன்னும் அவர்கள் யார் என்று அடையாளம் தெரியவரவில்லை.

கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்துள்ளனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், மற்ற மூவரும் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட உடனேயே உயிரிழந்தனர்.

திங்கள் முதல் ஒவ்வொரு 7 நிமிடத்துக்கும் ஒரு ரயில்... சென்னை மெட்ரோ அறிவிப்பு

இறந்தவர்களின் உடல்கள் களமசேரி மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

கொச்சி ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் இந்த விழாவை ஏற்பாடு செய்தது. வெள்ளிக்கிழமை தொடங்கிய விழாவில் சுமார் 2000 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திறந்தவெளி அரங்கில் மழை பெய்ததால், வெளியே இருந்தவர்கள் அவசர அவசரமாக உள்ளே செல்ல முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உள்அரங்கத்துக்குச் செல்ல முயன்றவர்கள் பலர் படிக்கட்டில் தவறி கீழே விழுந்துள்ளனர்.

களமசேரி மருத்துவக் கல்லூரி மற்றும் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கூடுதல் ஏற்பாடுகளை செய்ய சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வித்துறை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சியாரா ரிலீஸ் குறித்து சர்ப்ரைஸ் அப்பேட்! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு சவால் விடும் டாடா!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios